புயலால் உருக்குலைந்த டெல்டா மக்களின் துயர் துடைக்க உதவிடுவீர் !

1195 0


கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்தன. புயலால் மரங்கள், கூரை வீடுகள், மீனவர்களின் படகுகள் என அனைத்தும் சின்னாபின்னமாகின. இதனால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கிரசண்ட் பிளட் டோனர்ஸ் தஞ்சை மாவட்டத்தின் சார்பில் ஒரு திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதி மக்களின் வாழ்க்கையை மறுசீரமைப்பு செய்யும் வகையில் புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கஜா புயலால் உருக்குலைந்த டெல்டா பகுதி மக்களுக்கு உடனடியாக தென்னம்பிள்ளைகள் தேவைப்படுகிறது. ஒவ்வொரு கல்லூரி மாணவரும் ஒரு தென்னம்பிள்ளை வீதம் வழங்கினால் டெல்டா பகுதி மக்களை மீண்டும் பசுமை நிறைந்த மக்களாக மாற்ற முடியும். எனவே தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கல்லூரி மாணவர்களும் தலா ஒரு தென்னம்பிள்ளை வீதம் டெல்டா பகுதி மக்களுக்கு நிவாரணம் தாருங்கள் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

புயலால் உருக்குலைந்த டெல்டா மக்களின் துயர் துடைக்க நாமும் ஒரு தென்னம்பிள்ளையை நிவாரணமாக வழங்கலாமே !

தொடர்புக்கு :
பேரா. கே. செய்யது அகமது கபீர்- 88831 84888

வ. விவேகானந்தம்- 94423 18881

குர்ஷித்- 96770 59682


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: