தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் புதுமனைத் தெருவில் ஊசலாடும் மின்கம்பம்.
புதுமனைத்தெரு மசூதி அருகே கேஆர் காலனி செல்லும் வழியில் உள்ள மின்கம்பம் கஜா புயலின் கோரதாண்டவத்தால் சாய்ந்து இருந்தது. அதனை அங்குள்ள இளைஞர்களின் முயற்சியால் அதனை சரி செய்தனர்.இந்நிலையில் அந்த மின்கம்பம் மீண்டும் சாயத் தொடங்கி உள்ளது.இதை குறித்து பலமுறை உதவி மின்சார பொறியாளர் என பலரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்பது குற்றச்சாட்டாக இருக்கிறது.
இந்த பகுதியில் தான் அதிகமான பள்ளி செல்லும் வாகனங்கள், மாணவ,மாணவிகள்,பொதுமக்கள் என பலரும் கடந்து செல்கின்றனர்.கீழே விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தால் அந்த வழியை உபயோகப்படுத்த அச்சம் கொள்கின்றனர்.
ஆகவே மின்சார வாரியம் உடனே இந்த மின்கம்பத்தை சரிசெய்து பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
Your reaction