இந்தியாவில் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் நாள் அன்று 1000,500 ரூபாய்கள் செல்லாது என தலைமை அமைச்சராக உள்ள நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார்.
அவரது இந்த அறிவிப்பு முரணான ஒன்றாக இருந்தாலும், இந்த திடீர் அறிவிப்பால் பணக்காரன் முதல் ஏழை தொழிலாளர்கள் வரை வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை என சப்பை கட்டு கட்டிய மோடி அரசு,பகரமாக ₹2000 ரூபாய் தாள்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டது.
ஆரம்பத்தில் நல்ல புழக்கத்தில் இருந்த ₹2000ஆயிரம் ரூபாய் தாள்கள் சமிப காலங்களாக அதிகளவில் புழக்கத்தில் இல்லை.
இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத ஒரு வங்கியின் மூத்த அதிகாரி,ஒருவர் வங்கிகளின் நடவடிக்கைகள், அதிகாரிகளின் வார்த்தைகளை வைத்து பார்க்கும்போது இவ்வாண்டு இறுதிக்குள் ₹2000 ஆயிரம் ரூபாய்க்காண தடை அறிவிப்பு வெளியாகும் என தெரிவதாகவும்,
அரசியல் வாதிகள் கையில் அதிகளவில் சிக்குண்ட ₹2000 பணத்தை முடக்கும் நடவடிக்கைகள் தேர்தலுக்கு முன்னரே செயல் வடிவம் பெரும் என்றார்.
இதற்க்கு மாற்றாக ₹1000 ரூபாய் நோட்டுக்களை விட அரசு தயாரக வைத்துள்ளது என்றும் கடந்த முறைப்போல் அல்லாமல் மாற்றுப்பணம் உடனடியாக கிடைக்க வழிவகை செய்யவும் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
எனவே பொதுமக்கள் தங்களின் கையிருப்பில் உள்ள ₹2000 ரூபாய் நோட்டுக்களை வைத்துக்கொள்ளாமல் இருத்தல் இறுதி நேர அலைச்சலை தடுக்கும்.
Your reaction