கஜாவின் கோரத்தாண்டவம் அதிரையைத்தான் அதிகமாக துவம்சம் செய்துள்ளது என அனைத்து ஊடகமும், வானிலை நிலைய இயக்குனரும் தெரிவித்தன.
இதன் எதிரொலியாக நான்கு டெல்டா மாவட்டங்களும் வெகுவாக பாதிக்கப்பட்ட நிலையில் சேத விவரங்களை கணக்கிட மத்திய குழு ஒன்று தமிழகம் வந்தன.
அந்த குழுக்கள் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களின் கருத்தை கேட்டறிந்து மத்திய அரசுக்கு அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்பது விதி.
ஆனால் மத்திய குழுக்கள் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்ததாக தெரியவில்லை.
தஞ்சையை அடுத்த ஒரத்தநாட்டில் ஆய்வு மேற்கொள்ளாமல் மேலோட்டமாக பார்வையிட்ட அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தி அடங்குவதற்க்குள், அதிரைக்குள் வராமலேயே டிஜிட்டல்(?) சர்வே செய்து அதிகாரிகள் சாதனை படைத்துள்ளனர்.
டிஜிட்டல் இந்தியாவில் இதுவும் சார்தியம் என்பதை நிருபிக்கும் இந்த அதிகாரிகளுக்கு மத்திய அரசின் சார்பில் வருகிற குடியரசு தின விழாவில்,மோடியின் கரங்களால் விருதுகள் வழங்கினாலும் ஆச்சரியமில்லை என்கின்றனர் பாதிக்கப்பட்ட அதிரை மக்கள்.
Your reaction