விபத்தில் கால் முறிந்த பெண்ணிற்கு அதிரை TIYA சங்கத்தினர் நிதியுதவி !

1577 0


அதிரை ஷிஃபா பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் வெளியூர் சென்று வந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட எதிர்பார்க்காத விபத்தில் மனைவிக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் மருத்துவ செலவிற்கு உதவி செய்யுங்கள் என நமது அதிரை எக்ஸ்பிரஸில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் அதிரை TIYA வைச் சேர்ந்த குவைத் சகோதரர்கள் அப்பெண்ணின் மருத்துவ செலவிற்கு தங்களால் முயன்ற அளவு வசூல் செய்த ரூ.15,036ஐ பண உதவியை அதிரை TIYA சங்கத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்த பணத்தை அதிரை TIYA சங்க நிர்வாகிகள் இன்று பாதிக்கப்பட்ட பெண்ணுடைய கணவரின் நண்பரிடம் வீட்டிற்கு சென்று வழங்கினர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: