அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக இன்று 24/10/2018 உலக போலியோ தினம் கொண்டாடப்பட்டது.
போலியோ நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நகரின் முக்கிய வீதி வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்லப்ப்ட்டது.இந்தியாவை விட்டே போலியோ நோயினை உலக ரோட்டரி அறக்கட்டளையின் மூலம் எவ்வாறு ஒழிக்கப்பட்ட்து என்றும் நோயினை மீண்டும் நம்நாட்டில் வராமல் எவ்வாறு தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் பள்ளி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியினை அதிரை ரோட்டரி சங்க தலைவர்
Rtn.முகமது சம்சுதீன், செயலாளர்
Rtn.அகமது மன்சூர் மற்றும் பொருளாளர்
Rtn..சாகுல் ஹமீது ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சங்க உறுப்பினர்கள்Rtn.முகமது நவாஸ் கான்,Rtn.நடராஜன்,Rtn.அன்வர் ரஹ்மான்
மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
Your reaction