சென்னை ராயப்பேட்டை ஐஸ்ஹவுஸ் பகுதி காங்கிரஸ் கட்சி பிரமுகர் அப்பாஸ். இவர் உம்ரா சர்வீஸ் தொழில் செய்து வந்தார். மேலும் இவர் சமூக அமைப்புகளுடன் நட்பாக பழகக்கூடிய நபராகவும் இருந்து வந்தார்.
இந்நிலையில் திடீரென நேற்று இரவு எட்டு மணிக்கு தனது பாஸ்ட்புட் கடையில் இருந்த போது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு இதே அப்பாஸ் உட்பட சிலருக்கு கத்திகுத்து நடந்துள்ளது. இவ்விஷயத்தில் காவல்துறை சரியான நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த படுகொலை தடுக்கப்பட்டு இருக்கும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். தலைநகர் சென்னையில் ஒரு தேசிய கட்சியின் பிரமுகர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ :
Your reaction