தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4,820 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிக்கையை முன்னிட்டு வெளியூர்களுக்கு பயணம் செய்பவர்களுக்கு வசதியாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு 4,820 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் 2,275 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம் போன்ற சிறப்பு பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Your reaction