அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சாவூர் வாசன் கண் மருத்துவமனை இணைந்து தஞ்சாவூர் கண் சிறப்பு மருத்துவர்
Dr.ஆனந்த் மற்றும் குழுவினர்கள் தலைமையில்
அதிராம்பட்டினம் இமாம் சாஃபி மெட்ரிக் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இம் முகாமை அதிரை ரோட்டரி சங்க தலைவர் Rtn.எம் கே.முகமது சம்சுதீன் தொடங்கி வைத்தார்.ரோட்டரி சங்க செயலாளர்,Rtn.இசட்.அகமது மன்சூர்,மற்றும்
பொருளாளர்
Rtn.எஸ்.சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இம்முகாமில் 800 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக நடைபெற்றது.இதில்
60 க்கும் மேற்ப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவர்களால் உயர் சிகிச்ச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இம் முகாமில் அப்பள்ளியின் தலைமையாசிரியை
திருமதி..S.மீனா குமாரி,ரோட்டரி சங்க மாவட்ட நிர்வாகிகள்,Rtn.முகமது நவாஸ்கான்,Rtn.M.உதய குமார்,Rtn.M.முகமது தமீம்Rtn.K.வைரவன்,Rtn.M.நடராஜன்
மற்றும் உறுப்பினர்கள் Rtn.அன்வர்,Rtn.முகமது ஜமால்Rtn.ரியாஸ் அகமது,
Rtn.சேக் அப்துல்லாஹ்,Rtn.ராஜிக் அகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.
Your reaction