அதிராம்பட்டினம். நவ -09
அதிரை காலேஜ் முக்கம் முதல் சேர்மன் வாடி வரையிலான சாலை அமைப்பதற்கு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டன.
சுமார் ₹50லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இச்சாலை அமைக்க நமதூரை சேர்ந்த வீரையன் என்பவருக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் முடிந்துள்ளன.
ஆனால் சாலை அமைக்கப்பட்ட சில நாட்களிலேயே சாலையில் உள்ள கற்கள் உதிர தொடங்கியுள்ளது.
அதிரை வரலாற்றிலேயே முதன்முதலாக இளைஞர்கள் ஒன்றிணைந்து சாலையில் தரத்தை அளைவை அவ்வப்போது சோதித்து நடைந்த இப்பணி இவ்வளவு சீக்கிரம் பல்லை காட்டும் என நம்பவில்லை.
எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் ஊழல் தன் கடமையை செய்ய தவறாது என்பதன் உதாரணமாகத்தான் மேற்கண்ட நிகழ்வு நமக்கு உணர்த்துவதாக உள்ளன.
சாலை அமைத்த உடன் அதில் போடப்படும் கருங்கல் துகள் போடவில்லை என்றும் இதனால்தான் சாலைகள் தரமற்று பெயர்ந்து வருவதாகவும்,வாகன ஓட்டிகள் அச்சத்துடனே சாலையில் வாகனத்தை இயக்கி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Your reaction