ஏழைகளுக்கு எட்டாமல் போகிறதா விமான பயணம் ? இம்மாதம் முதல் கட்டண உயர்வு !

1835 0


இந்தியாவில் விமான கட்டணங்கள் இம்மாதம் முதல் உயர்த்தப்பட உள்ளன. எரிபொருள் விலையேற்றம், இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

டெல்லியில் தற்போது ஒரு கிலோ விமான டர்பைன் எரிபொருள் (ATF), விலை ரூ.74,567 என்ற அளவில் உள்ளது. ஆனால் முன்பு இது ரூ.69,461 என்ற விலையில்தான் இருந்தது. திங்கள்கிழமையான நேற்று மட்டும் ஜெட் எரிபொருள் விலை 7.3 சதவீதம் உயர்ந்துள்ளது. சமீபத்தில் ஒரே நாளில் அதிகம் உயர்த்தப்பட்ட விமான எரிபொருள் விலை இதுதான்.

எனவே விமான நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை உயர்த்தி லாபத்தை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. நீங்களே கவனித்திருக்கலாம், ஏர்லைன் நிறுவனங்கள் அவ்வப்போது வெளியிட்டு வந்த ஆஃப்பர்கள் இப்போது வெளியிடப்படுவதில்லை. கட்டண சலுகைகளையும் அறிவிக்கவில்லை. இதற்கெல்லாம் காரணம் எரிபொருள் விலையேற்றம்தான்.

இதன் அடுத்தகட்டமாக இம்மாத இறுதிக்குள் பல விமான நிறுவனங்கள் விமான கட்டணத்தை உயர்த்தயுள்ளன.

ஜெட்ஏர்வேஸ் போன்ற முன்னணி விமான நிறுவனங்கள் விமான பயணிகளுக்கு வழங்கும் இலவச சேவைகளை குறைத்து, அவற்றை பயணிகள் தேர்வுக்கே விட்டுள்ளன. சில விமான நிறுவனங்கள் சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளன.

ஒருபக்கம் சிறு நகரங்களையும் இணைக்க விமான நிலையங்கள் கட்டப்பட்டு வரும் சூழலில், விமான கட்டண உயர்வு என்பது மீண்டும் விமானம் என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே என்ற சூழலுக்கு மக்களை தள்ளுகிறது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: