சென்னை காசிமேட்டில் மீனவ சங்கங்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதரங்கள் தொடர்ந்து கேள்விக்குறியாகி வருவதை குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து ஏற்றப்பட்டு வரும் டீசல் உயர்வை கண்டித்தும்,இலங்கையுடனான பிரச்சனையில் தீர்வு காணாததை கண்டித்தும் மற்றும் மாற்று தொழில் வழிவகை செய்திடக் கோரியும் வருகிற அக்டோபர் 3 முதல் தமிழக விசைப்படகு மீனவர் நலசங்கம், மீனவ சங்கங்கள் மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்கள் இணைந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளனர்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு மீனவ நலசங்க மாநில செயலாளர் AK.தாஜுதீன் கலந்துகொண்டார்.
Your reaction