அதிரைக்கு அகலப்பாதை அமைப்பதை அடுத்து நிறுத்தப்பட்ட தொடர்வண்டி சேவையால் செக்கடி டூ மன்னடி வரை பல்வேறு நிறுவன பேருந்துகள் இயக்கப்பட்டன.
குறிப்பாக ராஹத் என்ற நிறுவனம் தனது சேவையில் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதனால் அப்பேருந்தை அதிரையைர்கள் வெகுவாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதில் பார்சல் புக்கிங் பிரதான ஒன்றாக மாற்றப்பட்டு செயல்படுகிறது, இதில் சென்னையில் இருந்து அதிரைக்கு பார்சல் புக்கிங் செய்தால் மதிப்பை விட பன் மடங்கு கட்டணம் வசூலித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் வாடிக்கையாளர்களை அலட்சியம் செய்தும் வருவதாக நமக்கு தெரிவித்துள்ளனர்.
இதே போன்ற அனுபம் முன்பு ஏற்பட்டதாக கூறுகிறார் மன்னடியை சேர்ந்த ஜமாலுத்தீன் என்பவர்.
தாம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிராம்பட்டினத்தில் உள்ள தனது மகனின் செல் போனுக்கு சார்ஜர் அனுப்ப கட்டணமாக ₹80 வசூலித்துள்ளனர்.
எனவே ராஹத் பேருந்து உரிமையாளர் டாக்டர் கமாலுதீன் அவர்கள் இவ்விவகாரம் தொடர்பாக தலையீடு செய்து நிவர்த்தி செய்திட வேண்டும், ஏற்றியவர்களே இறக்கிவிடும் முன்பாக….
Your reaction