அதிரையில் காட்டுத்தீயாக பரவி வரும் ஆடியோ – நம்ப வேண்டாம் !

Posted by - March 20, 2020

அதிரை மேலதெருவில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேல் இன்று இரவு 7 மணியளவில் யாரோ ஏறிச்சென்று ஏதோ மருந்தை கலந்ததாகவும், அதனால் நாளை யாரும் கார்ப்பரேஷன் தண்ணீர் அருந்த வேண்டாம் என்றும் அதிரை வாட்ஸ்அப் குழுமங்களில் ஆடியோ பதிவு ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதுகுறித்து விசாரித்ததில், இன்று இரவு 7 மணியளவில் 4 சிறுவர்கள் டிக்-டாக் வீடியோ எடுப்பதற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏரியுள்ளனர். அந்த குறிப்பிட்ட சிறுவர்களை அழைத்து மேலத்தெருவாசிகள் விசாரித்ததில், அவர்கள்

Read More

SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகரம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம்….!

Posted by - March 20, 2020

தஞ்சை தெற்கு மாவட்டம் மல்லிப்பட்டிணம் நகரம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் இன்று(20.3.20) மாலை 4:30 மணியளவில் நகரத்தலைவர் அப்துல் பஹத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரச்செயலாளர் ஜவாஹீர் முன்னிலை வகித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை பணிகள் என அனைத்து குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேனர்,நோட்டீஸ் போன்றவற்றை வினியோகிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் மாவட்ட செயலாளர் அஸ்கர்,மருத்துவர் ஜியாவூர் ரஹ்மான் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்வில் கட்சியின்

Read More

அதிரையில் உள்ள ஜுமுஆ பள்ளிகளின் ஜுமுஆ தொழுகை நேரம் மாற்றம் !

Posted by - March 20, 2020

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஜுமுஆ தொழுகைகளை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என தமிழ் மாநில உலமா சபை கேட்டுக்கொண்டது. அதனடிப்படையில் அதிரையில் இன்று(20/03/2020) நடைபெற உள்ள ஜுமுஆ நேரங்களை மாற்றியமைத்து அந்தந்த ஜுமுஆ பள்ளி நிர்வாக கமிட்டியினர் அறிவிப்பு செய்துள்ளனர். அதிரையில் உள்ள ஜுமுஆ பள்ளிகளின் மாற்றியமைக்கப்பட்ட நேரம் பின்வருமாறு : ஆசாத் நகர் முகைதீன் ஜுமுஆ பள்ளி : ஜும்மா சொற்பொழிவு சரியாக பகல் 1

Read More

நிர்பயா வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்..!!

Posted by - March 20, 2020

பாலியல் மற்றும் கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரும் சட்ட போராட்டத்திற்கு பின் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி தனது ஆண் நண்பருடன், பேருந்தில் சென்று கொண்டிருந்த மருத்துவ மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. டெல்லியில் நிகழ்ந்த இந்த வன்கொடுமையைக் கேள்விப்பட்டு ஒட்டுமொத்த தேசமும் அதிர்ச்சியில் உறைந்தது. அப்போது

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)