BREAKING : தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு !

Posted by - March 16, 2020

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதுவரை 80 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே டெல்லி, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகள் தவிர அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் வருகிற மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளித்து தமிழக

Read More

கொரோனாவை விட கொடூரமானது NPR – திட்டமிட்டபடி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் : ததஜ அறிவிப்பு !

Posted by - March 16, 2020

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பினால் CAA NRC NPR க்கு எதிரான மக்கள் போராட்டங்கள் கைவிடப்படுவதாக சில ஊடகங்களில் செய்தி பரவுகின்றது. NPR-க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி மார்ச் 18 அன்று நாம் அறித்திருந்த சிறைநிரப்பு போராட்டம் அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி நடைபெறும் இன்ஷா அல்லாஹ். இந்தியாவில் கொரானாவில் உயிரிழந்தோர் 2 பேர் மட்டுமே. ஆனால் CAA NRC NPR ஆகிய கருப்பு சட்டங்களால் 80 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இச்சட்டம் தமிழகத்தில் நடைமுறையாகும்

Read More

மரண அறிவிப்பு : அஸ்ரப் அலி அவர்கள் !

Posted by - March 16, 2020

மரண அறிவிப்பு : புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அப்துல் வாஹிது அவர்களின் மகனும், மர்ஹூம் யாகூப் ஹசன் அவர்களின் மருமகனும், முகம்மது மிராசாஹிப், பெளஸி ஆகியோரின் தகப்பனாரும், ஜமால் முகம்மது, ஜைனுல் உசைன், நிஃஹ்மதுல்லா, முகமது சுஜபு ஆகியோரின் சகோதரருமான அஸ்ரப் அலி அவர்கள் இன்று காலை 11 மணியளவில் ஆஸ்பத்திரி தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 8.30 மணியளவில் மரைக்காப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம்

Read More

திமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார்..?

Posted by - March 16, 2020

திமுகவின் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுச்செயலாளராக கோலோச்சிய பேராசிரியர் க.அன்பழகன் மார்ச் 7 அன்று இயற்கை எய்தினார்.இந்நிலையில் அந்த நாள் முதலே அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற மிகப்பெரிய கேள்வி கட்சிக்குள்ளும், வெளியேயும் எழத் தொடங்கி இருக்கிறது. இந்தப்போட்டியில் திமுகவின் முன்னணி தலைவர்கள் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.இதில் பொருளாளர் துரைமுருகன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து ரேசில் முதல் இடத்தில் இருக்கிறார்.அதேப்போல டிஆர் பாலு, எ.வ வேலு,ஆ. ராசா,திருச்சி சிவா போன்றவர்களின் பெயர்களையும் உடன்பிறப்புகள் ஒலிக்கின்றன.

Read More

அதிராம்பட்டினம் கனரா வங்கியில் பணம் எடுக்கும் போராட்டம்..!

Posted by - March 16, 2020

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் 100 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வறுதிறது.அதைப்போல தமிழகத்தில் ஷாஹின் பாக் என்னும் பெயரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தர்ணா போராட்டம் 40 இடங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.அதன் தொடர்ச்சி போராட்டமாக இன்று பல்வேறு பகுதிகளில் பணம் எடுக்கும் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் ஷாஹின் பாக் 27வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று திங்கள்கிழமை பணம் எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கனரா

Read More

துபாயில் இருந்து சென்னை வந்த 14 பேருக்கு கொரோனா வைரஸ்….

Posted by - March 16, 2020

துபாயில் இருந்து சென்னை வந்த 14 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டு பிடிப்பு 9ஆண்கள் 5பெண்களுக்கு பூவிருந்தமல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டானர். *உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,515ஆக உயர்வு 157 நாடுகளுக்கு பரவிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,69,415ஆக உயர்வு.

Read More

அதிரையில் போராட்டம் தொடரும் ஏற்பாட்டாளர்கள் அறிவிப்பு !

Posted by - March 16, 2020

அதிரை தொடர் போராட்டம் இன்றும் வழக்கம்போல்தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. உண்மைக்கு புற ம்பான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாமென கேட்டு கொள்கிறோம்.இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு இன்று காலை அளித்த பேட்டியில் CAA,NRC,NPR க்கு எதிரான போராட்டங்களை கொரானா வைரஸ் பரவுவதை தடுப்பதர்க்காக முடிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதனை நாங்கள் அதிரை தொடர் போராட்ட குழு பேசி முடிவெடுத்து பின்னர் அறிவிப்போம். அது வரை போராட்டம் தொடரும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

Read More

மரண அறிவிப்பு : முஹம்மது சுஹைப் அவர்கள் !

Posted by - March 16, 2020

மரண அறிவிப்பு : நடுத்தெரு மேல்புறத்தைச் சேர்ந்த நெ.மு.க. அஹமது ரசீது அவர்களின் மகனும், முஹம்மது அனிஸ், முஹம்மது அனஸ் ஆகியோரின் சகோதரருமாகிய முஹம்மது சுஹைப் அவர்கள் இன்று மதியம் அவரது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Read More

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னையில் 26 சர்வதேச விமானங்கள் ரத்து….

Posted by - March 16, 2020

சென்னை விமானநிலையத்தில் இன்று ஒரே நாளில் 26 சர்வதேச விமானங்கள் ரத்து இலங்கை−சென்னை 3, குவைத்−சென்னை 3, தோஹா, சிங்கப்பூர், பிராங்பர்ட், துபாய், மஸ்கட், ஹாங்காங், கோலாலம்பூரில் இருந்து சென்னை வரும் 13 விமானங்களும், சென்னையிலிருந்து புறப்பட்டு செல்லும் 13 விமானங்களும் ரத்து

Read More

கொரோனா வைரசால் தஞ்சையில் உள்ள 108 அவசர ஊர்திகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்….

Posted by - March 16, 2020

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகாளவிய அனைத்து நாடுகளுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. இப்போது ஒவ்வொரு நாடுகளும் தங்களது நாட்டு மக்களை பாதுக்கப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதனை போன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 108 அவசர ஊர்திகளில் நோய் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு நோய் தோற்று பரவாமல் இருக்க மருந்துகள் அடிக்கபட்டு வருகிறது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)