அதிரை ஷாஹீன் பாக் 26ம் நாள் : எஸ்.எஸ். பழனிமாணிக்கம் MP பங்கேற்பு !(படங்கள்)

Posted by - March 15, 2020

CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று 26வது நாளாக ஷாஹீன் பாக் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதிரை ஜாவியா ரோட்டில் நடைபெற்று வரும் இந்த தொடர் போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ். பழனிமாணிக்கம் MP, தமுமுக மாநில செயலாளர் திருச்சி ரஃபீக், திராவிட விடுதலை கழக பேச்சாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரை ஆற்றினர். மேலும் CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராகவும்,

Read More

அதிரை எக்ஸ்பிரஸிற்கு ‘சிறந்த ஊடகத்திற்கான’ விருது !

Posted by - March 15, 2020

அதிரை ரிச்வே கார்டன் கதீஜா மஹாலில் இன்று அதிரை ஜமாலியன் அலுமினி அசோசியேசன் துவக்க விழா நடைபெற்றது. இதில் சிறந்த ஊடகத்துக்கான விருது, “அதிரை எக்ஸ்பிரஸ்” ஊடகத்திற்கு வழங்கப்பட்டது. இவ்விருதினை திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி தாளாளர் வழங்கி கவுரவித்தார். அதிரை எக்ஸ்பிரஸிற்கு வழங்கியுள்ள இந்த சிறந்த ஊடகத்திற்கான விருதை அதன் நிருபர்களுக்கும், வாசகர்களுக்கும் சமர்பிக்கிறோம்.

Read More

CAAவிற்கு அதிமுக ஆதரவளித்த விவகாரம் – அதிரையில் அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள் !

Posted by - March 15, 2020

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் இன்று, கல்லூரியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழக கைத்தரித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியனை சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்நிலையில் CAA விற்கு ஆதரவாக அதிமுக வாக்களித்த நிலையில், அமைச்சர் ஓ.எஸ். மணியன் பங்கேற்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நூற்றாண்டு விழா நடைபெறும் காதிர் முகைதீன் கல்லூரி முன்பு ஆண்கள், பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அமைச்சர் ஓ.எஸ். மணியனை வெளியேறக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

Read More

காவு வாங்கும் கொரோனாவை கண்டு கொள்ளாத அதிரை பேரூராட்சி!!

Posted by - March 15, 2020

சைனாவில் கொரோனா வைரசால் இதுவரை ஆயிரக்கணக்கான மனிதர்கள் இறந்து உள்ளனர். மேலும் வைரசால் பாதிக்கப்பட்டவர்களை தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தமிழக முழுவதும் கொரோனா வைரஸ் பரவிக் கொண்டு இருக்கிறது. ஆனால் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள மக்கள் அதிகமாக வெளிநாடு பயணம் செய்து வருபவர்கள். பேரூராட்சி நிர்வாகமானது இதுவைரயும் எந்த ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கபடவில்லை என்று சமூக அர்வளர்கள் வர்த்தகம் தெரிவிக்கின்றன. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துத்துவது புகைமருத்து

Read More

அதிரை தொடர் போராட்ட அரங்கில் திருநாவுக்கரசர் MP உரையாற்றுகிறார் !

Posted by - March 15, 2020

குடியுரிமை சட்டத்திருத்தை கண்டித்து அதிராம்பட்டினத்தில் நடைபெற்று வரும் தொடர் போராட்ட அரங்கில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்துகிறார்கள். அதன்படி இன்று மாலை 26ம் நாள் அரங்கில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திருநாவுக்கரசர் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்துகிறார்.

Read More

அதிரை காதிர்முகைதீன் கல்லூரி நூற்றாண்டு விழாவில் அமைச்சரை வெளியேற்று !

Posted by - March 15, 2020

காதிர்முகைதீன் கல்லூரியின் நூற்றாண்டு விழா இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதற்க்கு சிறப்பு அழைப்பாளராக கைத்தறி துறை அமைச்சர் OSமணியன் வருகை புரிந்துள்ளார். இதனை கண்டித்து அதிராம்பட்டினம் பெண்கள் ஒன்றுதிரண்டு கல்லூரி நுழைவு வாயில் அருகே கண்டன கோஷங்களை எழுப்பியவாரு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)