குடியுரிமை சட்டத்தை எங்களால் ஒன்றும் செய்ய இயலாது ! தமிழக அரசு கை விரிப்பு!!

Posted by - March 14, 2020

தமிழக தலைமை செயலகத்தில் முதன்மை செயலாளர் சண்முகம் அழைப்பின் பேரில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக தமிழகத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடத்த சென்றனர். மாலை 5மணியளவில் கூடிய அக்கூட்டத்தில் முதன்மை செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். அப்போது பேசிய கூட்டமைப்பினர்,குடியுரிமை சட்டத்திருத்தை தமிழகத்தில் அமல்படுத்தா மாட்டோம் என சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கூறியுள்ளனர். அதற்க்கு அரசு தரப்பில் பேசிய சண்முகம், இது குறித்து முதல்வரிடம்

Read More

வாகன ஓட்டிகளுக்கு பேரிடி… பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியது மத்திய அரசு !

Posted by - March 14, 2020

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்துவதால் அதன் விலையும் உயரும் அபாயம் இருப்பதால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்கின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக எரிப்பொருளின் தேவை குறைந்ததால் கடந்த 4 அல்லது 5 நாட்களாக தொடர்ந்து

Read More

தொண்டியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Posted by - March 14, 2020

தொண்டி தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய அரங்கில் இயக்குநர்..சகோ.களஞ்சியம் கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து உரை நிகழ்த்த உள்ளார். அதேபோல் உள்ளிட்டோர் சகோ.யாசிர் அரஃபாத் இம்தாதி மாநில செயலாளர்,NTF கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்ய உள்ளனர்.

Read More

தஞ்சை தெற்கு மாவட்ட திமுக நடத்திய போட்டியில் மல்லிப்பட்டிணம் கிரிக்கெட் அணி வெற்றி…!

Posted by - March 14, 2020

தஞ்சையில் திமுக நடத்தும் தலைவர் கிரிக்கெட் லீக் முதல் சுற்று போட்டியில் மல்லிப்பட்டிணம் கிரிக்கெட் அணி வெற்றி. திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது, இதில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற போட்டியில் திருவோணம் அணியை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு மல்லிப்பட்டிணம் அணி தகுதி பெற்றது.

Read More

காலியாகிறது இந்தியாவின் கஜானா..

Posted by - March 14, 2020

தங்கத்தையும் சுமார் ( 28 டன் ) விற்கும் ரிசர்வ் வங்கி! கடந்த 30 ஆண்டுகளில் முதன் முதலாக இந்திய ரிசர்வ் வங்கி தன்னிடம் இருப்பு வைத்துள்ள தங்கத்தை விற்பனை செய்துள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு ஏற்கனவே 1.76 கோடி லட்சத்தை ரிசர்வ் வங்கி வழங்கியும் நிதிப் பற்றாக்குறை சீரடையவில்லை. இதனால் இருப்பு வைக்கப்பட்டுள்ள தங்கத்தை விற்பனை செய்து அதன் மூலம் வரும் லாபத்தை மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள ரிசர்வ் வங்கி முடிவு

Read More

அதிரை: தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நகர திமுக சார்பில் வாழ்வாதார உதவி

Posted by - March 14, 2020

தீவிபத்தால் உடமைகளை இழந்த குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவிகளை அதிரை திமுக சார்பில் வழங்கினர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் 6வீடுகள் தீக்கு இரையாகின. இந்த தீவிபத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதிரை திமுகவின் சார்பில் வாழ்வாதார உதவிகள் வழங்கி ஆறுதல் கூறப்பட்டது. நகர செயலாளர் இராம குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திமுகழக நகர நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Read More

அதிரையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Posted by - March 14, 2020

அதிராம்பட்டினத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய அரங்கில் தங்ககுமரவேல்தமிழக மக்கள் விடுதலை இயக்கம், பொதுச்செயலாளர். கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து உரை நிகழ்த்த உள்ளார். அதேபோல் உள்ளிட்டோர் மைளலானா. ஹைதர் அலி கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்ய உள்ளனர்.

Read More

அதிரை ஜமாலியன் அலுமினி அசோசியேசன் துவக்க விழா!

Posted by - March 14, 2020

திருச்சியில் புகழ்பெற்ற ஜமால் முஹம்மது கல்லூரியில் ஏராளமான அதிரையர்கள் கல்வி பயின்று பல்வேறு நாடுகளில் நல்ல தகுதிகளில் பணியாற்றி வருகின்றனர், குறிப்பாக அதிராம்பட்டினம் நகரில் இருந்து இக்கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் பயின்று உள்ளார்கள் என்பது தனி சிறப்பு. இதே போல் பல்வேறு ஊர்களிலில் இருந்தும் அக்கல்லூரியில் பயின்ற மாணவர்களால் அந்தந்த ஊர்களில் முன்னாள் மாணவர்கள் சங்கம் அமைத்து பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் நாளைய தினம் ரிச்வே கார்டனில் அதிரை

Read More

மரண அறிவிப்பு (ரஹ்மத் அம்மாள் CMPலைன்)

Posted by - March 14, 2020

மரண அறிவிப்பு (ரஹ்மத் அம்மாள் CMPலைன்) புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹும் த மு முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மகளாரும், மர்ஹும் முமுசெ ஹாஜி முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மனைவியும்,அப்துல் ரஜாக்,அப்துல் மாலிக்,ஹசன், பிஸ்மிலாக்கான் இவர்களின் மாமியாரும், தமீம் அன்சாரியின் தாயாருமாகிய ரஹ்மத்தம்மாள் சி எம் பி லைன் இல்லத்தில் காலமாகி விட்டார்கள். அன்னாரின் நல்லடக்கம் இன்று மஃரிப் தொழுகைக்கு பின்னர் மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Read More

மேலத்தெரு தாஜீல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் தேர்வு

Posted by - March 14, 2020

மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வுக்கூட்டம், சங்க வளாகத்தில் (11-03-2020) வியாழக்கிழமை நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் தேர்வினை J. முகமது புஹாரி, K.ராஜிக் முகமது, S.நிஜாமுதீன் ஆகியோர் நடத்தினர். இக்கூட்டத்தில், மெஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் புதிய தலைவராக P.M.K. தாஜுதீன், துணைத்தலைவராக M.M.S.முகமது இக்பால், செயலாளர்களாக P.ஜமாலுதீன், M.காதர் முகைதீன், துணைச் செயலாளராக N.சம்சுல் மன்சூர், பொருளாளர்களாக K. தாஜுதீன் (எ) சலீம், S. பகுருதீன் ஆகியோர் ஏகமனதாக

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)