கோரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை!!

Posted by - March 7, 2020

இந்தியாவில் கொரோனா வைரஸால்  மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 31 ஆக இருந்த நிலையில் தற்பொழுது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஓமனில் இருந்து இந்தியா வந்த தமிழர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை சிறப்பு செயலாளர் சஞ்சீவ் குமார் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அதேபோல் ஈரானில் இருந்து லடாக் வந்த இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மூன்று பேர் உடல்நிலையும் தற்பொழுது வரை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில் தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது, கொரோனா உறுதியானதை அடுத்து ஓமனில் இருந்து இந்தியா வந்த 45

Read More

அதிரை திமுகவினர் மறைந்த பொதுச் செயலாளருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி !

Posted by - March 7, 2020

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில பொது செயலாளராக இருந்தவர் க.அன்பழகன். இனமான பேராசிரியர் என திமுகவினரால் அழைக்கப்பட்ட பேராசிரியர் க. அன்பழகன், 43 ஆண்டு காலமாக திமுக பொது செயலாளராக இருந்தர். பல்வேறு தொகுதிகளில் இருந்து 9 முறை சட்டமன்றத்திற்கு தேர்வாகியும், முன்னாள் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் திறம்பட செயலாற்றியவர். வயோதிகத்தால் உடல்நலக் குறைப்பாடு ஏற்பட்டு கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த

Read More

பட்டுக்கோட்டை ஷாஹீன் பாக் தொடர் போராட்ட களத்தின் இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Posted by - March 7, 2020

குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக பட்டுக்கோட்டையில் நடைபெற்று வரும் ஷாஹீன் பாக் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய 12ம் நாள் (07/03/2020) அரங்கில், S.M. பாக்கர், இந்திய தவ்ஹீத் ஜமாத், சென்னை ந. சக்கரவர்த்தி, தொகுதி செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பட்டுக்கோட்டை ஹுஸைன் மன்ஃபயீ, மார்க்க பேச்சாளர், மேலப்பாளையம் நிஜாமுதீன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், நாகப்பட்டினம் ஆகியோர் பங்கேற்று கண்டன உரை ஆற்றுகின்றனர்.

Read More

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் காலமானார்!!

Posted by - March 7, 2020

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் உடல் நலக் குறைவால் கடந்த பிப்ரவரி மாதம் 24 ம் தேதியனறு சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று அதிகாலை 1 மணியளவில் சளி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக பேராசிரியர் க.அன்பழகன் காலமானார். திருவாரூர் மாவட்டம் காட்டூர் என்கிற கிராமத்தில் 1922 ம் ஆண்டு பிறந்த க.அன்பழகன், 43 ஆண்டுகாலம் திமுகவில் பொதுச் செயளாலராக இருந்து வந்தார். அவருடைய மறைவையடுத்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் விடுத்துள்ள

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)