அதிரை : குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி பள்ளி மாணவர்கள் கண்டன பேரணி !

Posted by - February 15, 2020

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது சென்னை மாநகர காவல்துறை தடியடி நடத்தியது. இதில் பெண்கள் உள்ளிட்ட பலர் தடியடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அதன் ஒரு பகுதியாக இன்று அதிராம்பட்டினத்தில் காதிர் முகைதீன் பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது வண்ணாரப்பேட்டையில் தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது

Read More

சென்னையில் சட்டமன்ற முற்றுகை, மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை – இஸ்லாமிய தலைவர்கள் அறிவிப்பு !

Posted by - February 15, 2020

இன்று சென்னையில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக ஜமாத்துல் உலமா மாநில தலைவர் ஹாஜா மொய்தின் ஹஜரத் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் NRC, NPR, CAA சட்டங்களை கண்டித்தும், சென்னை வண்ணாரப்பேட்டையில் போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற கோரியும் தமிழகம் முழுவதும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் இணைந்து சட்ட மன்றம் முற்றுகை, மற்ற மாவட்டங்களில்

Read More

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தில் சிறப்பு மருத்துவ முகாம் !(படங்கள்)

Posted by - February 15, 2020

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் மதுரை தன்வந்திரி ஆயுர்வேத வைத்தியசாலை ஆகியன இணைந்து நடத்திய மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் இன்று சனிக்கிழமை காலை முதல் மதியம் வரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தில் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் சிறப்பு மருத்துவராக தன்வந்திரி ஆயுர்வேத வைத்தியசாலையின் கிளை மருத்துவர் Dr. M. ஜெயலட்சுமி B.A.M.S பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார். இம்மருத்துவ முகாமில் ஆண்கள், பெண்கள் என 100க்கும்

Read More

வண்ணாரப்பேட்டை தடியடி எதிரொலி : கிருஷ்ணாஜிபட்டினத்தில் மறியல் !

Posted by - February 15, 2020

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது சென்னை மாநகர காவல்துறை தடியடி நடத்தியது. இதில் பெண்கள் உள்ளிட்ட பலர் தடியடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணாஜிபட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டமும் மறியலும் நடைபெற்றது. இதில் பெண்கள், குழந்தைகள் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Read More

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் – மக்கள் வெள்ளத்தில் மிதந்த அதிரை !(படங்கள்)

Posted by - February 15, 2020

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெறக்கோரியும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கண்டன பொதுக்கூட்டத்திற்கு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி நிர்வாக கமிட்டி தலைவர் அப்துல் ரஜாக் தலைமை தாங்கினார். அதிரை அனைத்து சமுதாய கூட்டமைப்பினர் முன்னிலை வகித்தனர். ஹசனார் தொகுத்து வழங்கினார். கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி தலைமை இமாம் மௌலானா. M.G.

Read More

சென்னை வண்ணாரப்பேட்டை சம்பவம் : பட்டுக்கோட்டையில் டிஎஸ்பி அலுவலகம் முற்றுகை!!

Posted by - February 15, 2020

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதிலும் எதிர்ப்பலைகள் எழுந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியாக தங்கள் வகுப்புகளை புறக்கணித்து போராடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அனைத்து சமுதாய கூட்டமைப்புகள் சார்பாக நேற்று (14.02.2020) வெள்ளிகிழமை மாலை போராட்டம் நடைபெற்றது. அமைதியான ஜனநாயக வழியில் போராடிக் கொண்டிருந்த மக்களை காவல்துறை கண்ணிமைக்கும் நேரத்தில் தடியடி நடத்தியது. இந்த தடியடியில் கைக்குழந்தைகளுடன் கலந்துக் கொண்ட பெண்களும்

Read More

இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் திட்டமிட்ட ஒன்று – மு.க. ஸ்டாலின் கண்டனம் !

Posted by - February 15, 2020

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நேற்று மாலை போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களை களைந்து செல்லுமாறு போலீசார் கூறியுள்ளனர். அவர்கள் கலைந்து செல்ல மறுத்த நிலையில், இணை ஆணையர் தினகரன் தலைமையிலான போலீசார், இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்தினர். மேலும் போராட்டக் களத்திற்கு வந்த தலைவர்களும் இழுத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். இருந்தும் பெண்கள் முன்னின்று தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர். போலீஸ் தடியடியை

Read More

பெண்களிடம் கண்ணியமற்ற முறையில் நடந்த காவல்துறைக்கு ஜமாத்துல் உலமா சபை கடும் கண்டனம் !

Posted by - February 15, 2020

சென்னை வண்ணாரப் பேட்டையில் காவல்துறை நடத்திய அராஜக வெறியாட்டத்திற்கு ஜமாத்துல் உலமா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த உலமா சபையின் அறிக்கையில் , “அமைதி வழியில் போராடிய பெண்கள் மீது காவல்துறை கண்ணியமற்ற முறையில் நடந்தது கடும் கண்டனத்துக்குரியது. மேலும் தடியடி நடத்திய காவல்துறை மீது அரசு துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசின் கருப்புச் சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.

Read More

வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டித்து அதிரையில் சாலை மறியல் !

Posted by - February 15, 2020

சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று மாலை CAA, NRC, NPR க்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீது காவல்துறை பயங்கர தடியடி நடத்தியது. இதனையடுத்து சென்னை வண்ணாரப்பேட்டையில் கொடூர தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து, இரவோடு இரவாக தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி தஞ்சை மாவட்டம்  அதிராம்பட்டினத்தில் நேற்று இரவு 10 மணியளவில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ECR சாலையில் நடைபெற்ற மரியலில், காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராகவும், அதிமுக அரசிற்கு எதிராகவும் இஸ்லாமியர்கள்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)