அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – காவல் நிலையத்தில் புகாரளித்த மதுக்கூர் தமுமுகவினர் !

Posted by - February 2, 2020

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்தி பாலாஜி, மதச்சார்பின்மைக்கு எதிராகவும், பிரிவினையை தூண்டும் விதமாகவும் பேசியதாக தமிழக எதிர்க்கட்சிகள், அமைச்சருக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை கண்டித்தும் தமுமுக சார்பில் 100க்கும் மேற்பட்டோர் பதாகைகளுடன் பேரணியாக சென்றனர். பின்னர் அவர்கள், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுக்கூர் காவல்

Read More

BREAKING- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி..!!

Posted by - February 2, 2020

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த தகவலை ஏ.என்.ஏ செய்தி நிறுவனம் உறுதிபடுத்தியிருக்கிறது. காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகிய பின்னர், சோனியா காந்தி இடைக்கால தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், இரவு 7 மணியளவில், டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில், சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் ஆஸ்துமா தொல்லை காரணமாக சோனியா அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், வழக்கமான மருத்துவ

Read More

மதுக்கூரில் குடியுரிமை சட்டம் எதிராக திமுக சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கம் !

Posted by - February 2, 2020

குடியுரிமை சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி சென்னையில் கையெழுத்து இயக்கத்தை எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து திராவிட முன்னேற்றம் கழகம் சார்பாக மதுக்கூரில் பேருந்து நிலையத்தில் குடியுரிமை திருத்த சட்டம் , தேசிய மக்கள் பதிவேடு தயாரிப்பதை நிறுத்த கோரியும் அதற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மாணவர்கள் , பெரியோர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு கையெழுத்தை பதிவு செய்தி எதிர்ப்பினை தெரிவித்தனர்.

Read More

முத்துப்பேட்டையில் CAA-NRC-NPR திரும்பபெற வலியுறுத்தி மாபெரும் கருத்தரங்கம்…!!

Posted by - February 2, 2020

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை திரும்ப்பெற வலியுறுத்தியும் NPR, NRC எதிராகவும் நாடுமுழுவதும் போராட்டங்கள் , ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதைப்போன்று அரசியல் கட்சிகள் கண்டன பொதுக்கூட்டம் , கருத்தரங்கம் , மாநாடு போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் குத்பா பள்ளி இளைஞர் அணி மற்றும் அனைத்து முஹல்லா இளைஞர் அணி இணைந்து நடத்தும் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்பபெற வலியுறுத்தி மாபெரும் கருத்தரங்கம் எதிர்வரும் செவ்வாய்கிழமை (04/02/2020) அன்று

Read More

அதிரையில் PFI தின ஒத்திகை ! மிடுக்கான அணிவகுப்பு!!

Posted by - February 2, 2020

பாப்புலர் ஃப்ரண்ட் துவக்க தினத்தை பாப்புலர் ஃப்ரண்ட் நாளக கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு வருகிற 17 ஆம் நாள் அன்று, ஒற்றுமை அணிவகுப்பு, பொதுக்கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் 18 மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில். நடைபெறும் அதனடிப்படையில் வருகின்ற பிப்ரவரி 17ஆம் நாள் அன்று நாட்டின் பல பகுதிகளிலும் அணிவகுப்பு கொடியேற்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது. அதற்கான அணிவகுப்பு ஒத்திகை அதிராம்பட்டினம் கடற்கரை தெரு மைதானத்தில் நடைபெற்றன.

Read More

தஞ்சை,புதுகை மீனவ சங்க பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை…!

Posted by - February 2, 2020

தஞ்சை,புதுக்கோட்டை விசைப்படகு மற்றும் நாட்டுபடகு சங்கத்தின் சார்பில் அவசர கூட்டம் மல்லிப்பட்டிணத்தில் நடைபெற்றது. தீர்மானத்தின் அடிப்படையில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி பிப் 7அன்று சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று(2.2.2020) மீன்வளத்துறை உதவி இயக்குனர் தலைமையில் பேச்சுவார்த்தைக்கு இரண்டு மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் போராட்டதை கைவிடுவதாக தமிழ்நாடு மீனவ பேரவை மாநில பொதுச்செயலாளர் AK.தாஜூதீன் அறிவித்தார்.

Read More

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வீடு வீடாக சென்று கையெழுத்து வாங்கிய ஸ்டாலின், வைகோ !(படங்கள்)

Posted by - February 2, 2020

குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி சென்னை திரு.வி.க நகர் பேருந்து நிலையத்திற்கு அருகே கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அதேபோல் திமுக கூட்டணிக் கட்சி தலைவர்களும் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று (02/02/2020) காலை, சென்னை- துறைமுகம் தொகுதிக்குட்பட்ட கொண்டித்தோப்பு- பெருமாள் முதலி தெருவில் வீடு வீடாகச் சென்று குடியுரிமைச் சட்ட திருத்தத்திற்கு எதிராகக் கையெழுத்து வாங்கி, கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. மத்திய

Read More

தமிழகத்தில் கோரோனா வைரஸ் அறிகுறிகளுடன் 6 பேர் அனுமதி..!!

Posted by - February 2, 2020

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. தற்போதுவரை இந்த வைரஸ் பாதிப்பினால் 250-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 11,000 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். வுகான் நகரில் தொடங்கிய வைரஸ் பிற நாடுகளுக்கும் பரவி உலக மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, கேரளத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. `இந்தியாவின் முதல் கொரோனா பாதிப்புள்ள நபர்’ என்ற அந்த அறிவிப்பை

Read More

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் – அதிரை திமுகவினர் பங்கேற்பு !

Posted by - February 2, 2020

இஸ்லாமியர்கள் மற்றும் ஈழத்தமிழர்களை ஒடுக்கும் விதமாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள CAA, NRC, NPR ஆகியவற்றை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முதல் வருகிற 8ம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடைபெற இருக்கிறது. அவ்வகையில் பட்டுக்கோட்டை பகுதியில் இன்று காலை ஆலடிக்குமுளை பகுதியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் அதிரை பேரூாட்சிமன்ற முன்னாள் தலைவர் அஸ்லம் தலைமையில், திமுக ஒன்றிய பிரதிநிதி அலீம், ஹாஜா முகைதீன், திமுக

Read More

ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை கண்டித்து மதுக்கூரில் ஆர்ப்பாட்டம் !(படங்கள்)

Posted by - February 2, 2020

டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து தமுமுகவின் மாணவர் அமைப்பான சமூகநீதி மாணவர் இயக்கம் SMI சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு SMI மாவட்ட செயலாளர் முகமது இம்ரான் தலைமையேற்றார், SMI பொறுப்பாளர் இம்தியாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார், தமுமுக மமக மாவட்ட பொறுப்பு குழு தலைவர் முகமது சேக் ராவுத்தர் துவக்கவுரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர தலைவர் சேக் அஜ்மல்,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)