கனமழை எதிரொலி – 8 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு !

Posted by - December 1, 2019

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு கணமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை 02/12/19 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை 02/12/19 விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Read More

உள்ளாட்சி தேர்தல் தேதி நாளை அறிவிப்பு ?

Posted by - December 1, 2019

உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை நாளை (02.11.2019) அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தகவல். உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நிறைவடைந்த நிலையில், நாளை அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் நாளை அறிவிக்கப்படாவிட்டால் டிசம்பர் 7- ஆம் தேதிக்குள் உறுதியாக தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

Read More

மண்புழு போல ஊர்ந்து போய் முதல்வராக மாட்டேன்… ஸ்டாலின் காட்டம் !

Posted by - December 1, 2019

நான் மண்புழு போல ஊர்ந்து சென்று தாம் முதலமைச்சராக விரும்பவில்லை. அப்படி ஒரு மானங்கெட்ட முதல்வர் பதவி எனக்கு தேவையில்லை, என்று திமுக தலைவர் ஸ்டாலின் மிகவும் காட்டமாக பேசி உள்ளார். சில நாட்களுக்கு முன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருந்த முதல்வர் பழனிசாமி, நானும் திமுக தலைவர் ஸ்டாலினும் ஒரே வருடத்தில்தான் எம்எல்ஏ ஆனோம். இருவரும் அரசியலுக்கு வந்தது ஒரே காலகட்டம்தான். நான் முன்னேறிவிட்டேன். நான் முதல்வராகிவிட்டேன். ஆனால் அவரால் வளர முடியவில்லை,

Read More

நாகையில் கொட்டும் மழை… களத்தில் இறங்கிய தமீம் அன்சாரி எம்எல்ஏ !

Posted by - December 1, 2019

நாகப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் சீரமைப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளார் அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.தமிமுன் அன்சாரி. நாகை மற்றும் நாகூர் பகுதிகளுக்கு இன்று சென்ற தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ, முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியை ஆய்வு செய்ததோடு தேங்கி நின்ற மழைநீரை அகற்றவும் நடவடிக்கை மேற்கொண்டார். நாகை மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாட்களாக இடை விடாது அடைமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில்

Read More

கிருஷ்ணாஜிபட்டினத்தில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர்… பொதுமக்கள் முகாம்களில் தங்கவைப்பு !

Posted by - December 1, 2019

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையால் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தின் கடலோர பகுதியான கிருஷ்ணாஜிபட்டினத்தில் கனமழையால், கண்மாய்கள் நிரம்பி வெள்ள நீர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. பொதுமக்களின் வீடுகளில் வெள்ளநீர் நுழைந்ததால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அப்பகுதியில் இருந்த மக்கள் சுமார் 500 பேர் வீடுகளை விட்டு அப்புறப்படுத்தப்பட்டு, புயல் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாமில் உள்ள மக்களை நேரில் பார்வையிட்ட அரசு அதிகாரிகள், அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட

Read More

அதிராம்பட்டினத்தில் 82.50 மிமீ மழை பதிவு !

Posted by - December 1, 2019

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டமான தஞ்சையிலும் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, மதுக்கூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த கணக்கின்படி, கடந்த 24 மணிநேரத்தில் தஞ்சை மாவட்டத்தில் பதிவான மழை அளவு : அதிராம்பட்டினம் – 82.50மிமீ கீழ்அணை – 101மிமீ வெட்டிக்காடு

Read More

முத்துப்பேட்டை : ஆலங்காடு அருகே மூழ்கிய ரயில்வே சுரங்கப் பாதை !

Posted by - December 1, 2019

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகேயுள்ள ஆலங்காடு கிராமத்தில் அமைந்துள்ள வல்லம்பகாடு ரயில்வே சுரங்கப்பாதையானது தொடர்மழையினால் மூழ்கும் நிலையில் உள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர்மழை காரணத்தினால் சுரங்க பாதையானது மூழ்கும் நிலை ஏற்பட்டது. சுரங்கப்பாதை மூழ்கியதால் எளிதாக வந்து சென்றுகொண்டிருந்த கிராம வாசிகள் தற்பொழுது வெளியே வந்து செல்வதற்கு அவதிப்பட்டு வருகின்றனர்.

Read More

பட்டுக்கோட்டை : வெளுத்து வாங்கும் கனமழை… பயணிகள் கடும் அவதி !

Posted by - December 1, 2019

தமிழகம் முழுவதும் வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 3 தினங்களாக டெல்டா உட்பட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்திலும் மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் பட்டுக்கோட்டை பகுதியில் விடாமல் மழை பெய்து வருவதால்  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில்  பல்வேறு இடங்களுக்கு செல்லும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். மேலும் பேருந்து நிலையத்திலிருந்து பள்ளி செல்லும் குழந்தைகள் ,

Read More

கொட்டித்தீர்த்த கனமழையால் விபத்தில் சிக்கிய சுற்றலா பயணிகளுக்கு பள்ளிவாசலில் இடம்கொடுத்து பாதுகாத்த எம்எல்ஏ !

Posted by - December 1, 2019

கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் காரைக்கால், நாகூர், வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளுக்கு ஒரு பேருந்தில் சுற்றலா வந்திருந்தனர். பின்னர் மீண்டும் கேரளா நோக்கி இன்று காலையில் சென்று கொண்டிருந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பேருந்து வந்தபோது பலத்த மழை பெய்துள்ளது. நீர்முளை பகுதியில் சாலையில் இருந்த ஈரப்பதத்தால் எதிர்பாராத விதமாக வலுக்கிய பேருந்து சாலையோரம் இருந்த சுவற்றில் மோதி நின்றது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. பேருந்தில் வந்தவர்கள்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)