அதிரை புத்தாண்டு நிகழ்வில், NRC,CAAவுக்கு எதிராக கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்க முடிவு!

Posted by - December 31, 2019

நாடெங்கிலும் NRC,CAA,NPR ஆகிய சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைப்பெற்று வருகிறது. தமிழகத்தில் வீட்டு வாசலில் இடப்படும் கோலங்களில் கூட எதிர்ப்பு வாசகங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் 2020ஆம் ஆண்டு பிறக்கும் இத்தருணத்தில் பல்வேறு இடங்களில் கருப்பு ஆண்டாக அனுசரிக்க முடிவு செய்துள்ளனர். அந்த வகையில், அதிரை SDPI கிளை சார்பில் நள்ளிரவு 12:01 மணிக்கு கருப்பு கொடி ஏற்றப்பட்டு மெழுவர்த்தி ஏற்றி இருளை அகற்ற உள்ளனர். இடம்: SDPI மாவட்ட அலுவலகம். செக்கடிமேடு அருகில்

Read More

உள்ளாட்சி தேர்தல்: ஏரிபுறக்கரை ஊராட்சி வாக்கு பதிவு நிறைவு !

Posted by - December 30, 2019

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்ச்சிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது, இதில் அதிகளவில் வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். கடந்த சில நாட்களாக அனல் பறக்கும் பிரச்சாத்தில் ஈடுபட்டனர். காலைமுதலே மந்தகதியில் நடைபெற்ற வாக்கு பதிவு மதிய வேளையில் சூடு பிடித்தது. வாக்கு பதிவு முடிவுறும் நேரத்திக் சுமார் 2100 வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

சவுதியில் மெக்கா குறித்து பதிவிட்டு கைதான நபரை மீட்க இந்திய முஸ்லீம்கள் முயற்சி…!

Posted by - December 29, 2019

மெக்கா குறித்து பேஸ்புக்கில் சர்ச்சை பதிவிட்டதாக சவுதியில் கைதான இந்தியரை மீட்க, கர்நாடகாவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் முயன்று வருகின்றனர். கர்நாடகாவில் உடுப்பி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ் பங்கேரா. இவர் சவுதி அரேபியவில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஏ.சி மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அவரின் பெயரில் இருக்கும் பேஸ்புக் கணக்கில் இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவை இடித்து ராமர் கோவில் கட்ட வேண்டும் என்றும், சவுதி பட்டத்து இளவரசரை விமர்சித்தும் பதிவு போடப்பட்டிருந்ததாகக் கூறி அவர்

Read More

சென்னையில் பத்தாயிரம் பேர் மீது போலீசார் வழக்குபதிவு…!

Posted by - December 29, 2019

சென்னை ஆலந்தூரில் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய 10 ஆயிரம் பேர் மீது பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. சென்னையில் நேற்று தவ்ஹீத் ஜமா அத் பிரமாண்ட போராட்டம் நடத்தினர். ஆலந்தூரில் இருந்து ஆளுநர் மாளிகையை நோக்கி அவர்கள் பேரணியாக சென்ற நிலையில், அவர்கள் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் குடும்பத்துடன்

Read More

NRC, CAA-விற்கு எதிராக ஜப்பானில் இந்தியர்கள் போராட்டம் !(படங்கள்)

Posted by - December 28, 2019

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல தரப்பட்ட மக்களும் போராடி வருகின்றனர். இந்தியாவை கடந்து வெளிநாட்டில் வாழும் இந்தியர்களும் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று ஜப்பான் வாழ் இந்தியர்கள் டோக்யோ நகரத்தில் உள்ள இந்திய தூதரகம் முன்பு போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Read More

அதிரையில் நடைபெற்ற பண்பலை 90.4ன் நேயர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!!

Posted by - December 28, 2019

அதிராம்பட்டினம் பண்பலை 90.4ன் நேயர்கள் சந்திப்பு நிகழ்வு இமாம் ஷாஃபி கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிலையத்தின் முதன்மை இயக்குநர் எம் எஸ் தாஜுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் இலங்கை வானொலியின் அறிவிப்பாளர் பி எச் அப்துல் ஹமீது,மற்றும் முனவ்வர் ஆகியோர் கலந்து கொண்டு நேயர்களுடன் கலந்துரையாடினார். முன்னதாக இந்நிகழ்வில் காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் அப்துல்காதர் வரவேற்புரை நிகழ்த்தினார். காதிர் முகைதீன் கல்லூரியின் தமிழ்த்துறை ஆசிரியர் செய்யது அஹமது கபீர் முன்னுரை நிகழ்த்தினார்

Read More

தொடங்கியது உள்ளாட்சித் தேர்தல் : தஞ்சை மாவட்டத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு!!

Posted by - December 27, 2019

கடந்த இரு வருடங்களாக காலியாகி கிடந்த ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர் போன்ற பதவிகளுக்கு தற்போது முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஊராட்சிக்கு உட்பட்ட வாக்கு மையங்களில் நடைபெறும் தேர்தல் நிலவரங்களை தேர்தல் மண்டல அதிகாரி ரவிசங்கர் பார்வையிட்டார்.

Read More

அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய 6ஆம் ஆண்டு கைப்பந்து தொடர் போட்டி..!

Posted by - December 27, 2019

அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய 6 ஆம் ஆண்டு கைப்பந்து தொடர் போட்டி இன்று அதிராம்பட்டினம் கீழத்தெரு மைதானத்தில் நடைபெற்றது. இதில் இன்றைய தினம் அதிரையை சார்ந்த பல்வேறு அணிகள் கலந்து கொண்டன. இந்த ஆட்டத்தில் கீழத்தெரு அணி,மேலத்தெரு அணி,தரகர் தெரு அணி,என பல்வேறு அணிகள் கலந்து கொண்டனர். இதில் மேலத்தெரு வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் ஜூனியர் அணியினருக்கும் ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் கிழத்தெரு அணியினருக்கும் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் மேலத்தெரு வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ்

Read More

மல்லிப்பட்டிணத்தில் சுனாமி நினைவு தின அஞ்சலி…!

Posted by - December 26, 2019

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் இன்று(26.12.2019) 15வது சுனாமி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நினைவு தினத்தில் மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் AK.தாஜூதீன் தலைமை தாங்கினார்.இதில் நினைவு தினத்தை போற்றும் விதமாக கடலில் மலர்களை தூவியும்,மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.இணைவோம் தொண்டு நிறுவன இயக்குனர் நன்றி கூறினார்.இந்த அஞ்சலியில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)