அதிரையில் நிலவேம்புக் குடிநீர் வழங்கும் முகாம் !(படங்கள்)

Posted by - November 6, 2019

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை அதிரை சகோதரர்கள் வாட்ஸ்அப் குழுமம் சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமினை அதிரை பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் அன்பரசன் துவங்கி வைத்தார். இதில் பயணிகள், பொதுமக்கள் என சுமார் 400 நபர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இந்த முகாமிற்கான ஏற்பாட்டினை அதிரை சகோதரர்கள் வாட்ஸ்அப் குழும நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Read More

திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு அணிவித்து பூஜை செய்த அர்ஜுன் சம்பத் அதிரடி கைது !

Posted by - November 6, 2019

பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்ச மாலை அணிவித்து, காவி துண்டு போர்த்தியதற்காக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார். இரு நாட்கள் முன்பாக, பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது சில மர்ம நபர்கள் சிலர் சாணத்தை வீசிவிட்டு சென்றுவிட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சாணம் வீசிய விஷமிகள் மீது கடும் நடவடிக்கை தேவை என்று மாநில அரசுக்கு, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். சமூக

Read More

அதிரையில் நாளை மின்தடை !

Posted by - November 6, 2019

மதுக்கூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, மதுக்கூர் நகரம், துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, அத்திவெட்டி, பெரியக்கோட்டை ஆகிய ஊர்களில் நாளை நவ. 07 வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மதுக்கூர் துணை மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More

அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் !(தீர்மானம் மற்றும் படங்கள்)

Posted by - November 6, 2019

அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் அக்டோபர் மாத ஆலோசனை கூட்டம் கடந்த 31-10-2019 வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் துணைத்தலைவர் S.K.M. ஹாஜா முகைதீன் தலைமை தாங்கினார். உறுப்பினர் ஹாபிழ். யாகூப் ஹுஸைன் கிராஅத் ஓதினார். மக்கள் தொடர்பு அலுவலர் சேக்கனா நிஜாம் வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் S.A. அப்துல் ஹமீது மாத அறிக்கை வாசித்தார். இறுதியாக துணைச்செயலாளர் A.S. அகமது ஜலீல் நன்றியுரை வாசித்தார். கூட்டத்தில்

Read More

அயோத்தி விவகாரம் : கீழக்கரை காவல் நிலையத்தில் கலந்தாய்வுக் கூட்டம்!!

Posted by - November 6, 2019

அயோத்தியில் உள்ள பாபர் மஸ்ஜித் நில விவகாரத்தின் தீர்ப்பு இம்மாதம் இறுதிக்குள்  வர இருப்பதையொட்டி கீழக்கரையில் அனைத்து ஜமாத் மற்றும் கட்சி இயக்கங்கள் இந்து அமைப்புகள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு கீழக்கரை காவல் துறையால் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் தீர்ப்பு யாருக்கு சாதகமாக அல்லது பாதகமாக இருந்தாலும் அதை  கொண்டாடவோ பட்டாசு வெடிக்கவோ ஊர்வலம் செல்லவோ தடை விதிக்கப்பட்டது. மேலும் ,சமூக வலைத்தளங்களில் கவனமாக செயல்படவும் தீர்ப்பை உடனே விமர்சிக்கவும் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More

அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் நபிகளாரும் நாமும் பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு…!

Posted by - November 6, 2019

அதிராம்பட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நபிகளாரும் நாமும் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் பேருந்து நிலையத்தில் வருகிற நவம்பர் 10 அன்று மாலை 6:30 மணிக்கு நடைபெற இருக்கிறது. பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன் தலைமையில் நடைபெறுகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பொதுச்செயலாளர் முகமது அலி ஜின்னா,எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெஹ்லான் பாகவி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் ரஃபீக் அகமது ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்புறையாற்றுகின்றனர். இக்கூட்டத்தில்

Read More

சென்னையில் அதிரையர் மர்மமான முறையில் மரணம்!!

Posted by - November 6, 2019

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டிணத்தை சேர்ந்வர் சபியுல்லா. இவர் சென்னை மன்னடியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் இன்று மாலை சபியுல்லா அவர் தங்கியிருந்த விடுதியில் மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளார். உடனே விடுதியில் உள்ளவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை சபியுல்லாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்விற்க்காக அனுப்பி வைத்தனர். மேலும் சபியுல்லா மர்மமான முறையில் இறந்து கிடந்ததை அடுத்து இவர் கொல்லப்பட்டாரா

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)