தஞ்சை மற்றும் புதுகை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் !(படங்கள்)

Posted by - October 4, 2019

தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு சங்க அவசர ஆலோசனை கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மல்லிப்பட்டினம் துறைமுக வளாக கட்டிடத்தில் மாநில மீனவர் பேரவை பொதுச்செயலாளர் A. தாஜுதீன் தலைமையிலும், தஞ்சை மாவட்ட தலைவர் A. ராஜமாணிக்கம், மாவட்ட செயலாளர் வடுகநாதன், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் சின்ன அடைக்கலம், மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது மற்றும் சங்க நிர்வாகிகள் செல்வகிளி இபுராஹீம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானம் 1 : கஜா

Read More

அதிரைக்கு வரும் தண்ணீரை ஷட்டர் மூலம் திருப்பிவிட்ட விஷமிகள்… கொதிப்பில் நீர்நிலை ஆர்வலர்கள் !

Posted by - October 4, 2019

அதிராம்பட்டினம் நீர்நிலை அறக்கட்டளையின் முயற்சியாலும், இன்னும் சில அமைப்புகளின் முயற்சியாலும் அதிராம்பட்டினத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக, அதிரையில் உள்ள குளங்களை நிரப்பும் வகையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு ராஜாமடம் வாய்க்கால் வழியாக CMP வாய்க்காலுக்கு பொதுப்பணித்துறையால் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு ஒரு குளம் கூட நிறையாத நிலையில், இரண்டே நாட்களில் செல்லிக்குறிச்சி ஏரிக்கு தண்ணீர் திருப்பிவிடப்பட்டுள்ளது. இதனால் அதிரைக்கு வரவேண்டிய தண்ணீர் தடைபட்டு, குளங்கள் வற்றி காணப்படுகிறது. இதுகுறித்து உரிய

Read More

மோடிக்கு கடிதம் எழுதிய மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு பாய்ந்தது !

Posted by - October 4, 2019

கும்பல் வன்முறைகளைத் தடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு பாய்ந்துள்ளது. இயக்குநர்கள் மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 49 பிரபலங்கள் கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தனர். அதில், மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவது அதிகரித்துள்ளது. அரசை விமர்சிப்பதாலேயே ஒருவரை தேசவிரோதி, நகர்ப்புற நக்சல் என முத்திரை குத்துவதை ஏற்க முடியாது என குறிப்பிட்டிருந்தனர். இந்த கடிதத்துக்கு

Read More

மஜக தேனி மாவட்டத்தில் தலைமை நிர்வாகிகள் ஆய்வு கூட்டம்..!

Posted by - October 4, 2019

மனிதநேய ஜனநாயக கட்சியின் தேனி மாவட்டத்தின் ஆய்வுக் கூட்டம் இன்று கம்பம் ரிலாக்ஸ் பாய்ட் ஹோட்டலில் நடைபெற்றது. ஆய்வுக்குழு உறுப்பினர்கள் மவ்லா நாசர், நாசிர் உமரி, மைதீன் உலவி, J.S.ரிபாயி ரஷாதி, தேனி மாவட்ட பொறுப்பாளரும் கட்சியின் துணை பொதுச் செயலாளருமான மன்னை செல்லச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகர நிர்வாகம் கட்டமைப்பது பற்றியும், கிளைகளை வலுப்படுத்துவது பற்றியும், உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்தப்பணி பற்றியும், அக்-2 முதல் 15 “மது ஒழிப்பு

Read More

இந்திய கால்பந்து அணிக்கு இராமநாதபுரத்தை சேர்ந்த வீரர் தேர்வு !!

Posted by - October 4, 2019

கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரீங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர் இராமநாதபுரம் கேணிக்கரை பகுதியைச் சார்ந்த அபுல் ஜராருதீன் (வயது 19.) இவர் கால்பந்து விளையாட்டை சிறுவயது முதலே ஆர்வத்துடன் விளையாடி வந்துள்ளார். இந்நிலையில் அவர் 19வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு தோ்வு செய்யப்பட்டு வரும் டிசம்பர் மாதம் கத்தார் நாட்டில் நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணி சார்பாக விளையாட உள்ளார். இவரை கல்லூரி நிர்வாகிகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் சுரேஷ்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)