டெங்குவை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன.. அறிக்கை கேட்கிறது உயர்நீதிமன்றம் !

Posted by - September 30, 2019

டெங்குவை கட்டுப்படுத்த எடுக்கபட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு பாதிப்பால் உடல்நலகுறைவும், ஆங்காங்கே பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலியாகி வரும் நிலையில், டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தவும், உயிரிழப்புகளை தடுக்கவும் நடவடிக்கை கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் என்பவர் பொது நல மனுத்தாக்கல் செய்துள்ளார். சுகாதாரத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உரிய நேரத்தில் நிரப்பாததும், அதில் அரசு மெத்தனபோக்கை காட்டுவதும் தான் காரணமென

Read More

அதிரை பிலால் நகரில் முறையான அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி எம்எல்ஏ சி.வி.சேகரிடம் கோரிக்கை மனு !

Posted by - September 30, 2019

அதிராம்பட்டினம் பிலால் நகரில் முறையான மழைநீர்/கழிவு நீர் வடிகால் வசதி அறவே இல்லாததால், ஆண்டு தோறும் பெய்யும் மழையால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. பிரதான சாலைகள் முற்றிலும் சேதமடைந்து, சேரும் சகதியுமாகக் காட்சியளித்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மழைநீர் குடியிருப்புகளில் புகுந்து விடுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியையொட்டி அமைந்துள்ள செடியன் குளம் தென்கரை

Read More

மாநில அளவிலான சிறுவர் கால்பந்து போட்டியில் அசத்திய அதிரை WFC அணி !

Posted by - September 30, 2019

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் 12 மற்றும் 14 வயதிற்குட்பட்டோருக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இத்தொடரில் தஞ்சை, தூத்துக்குடி, நெல்லை, பாண்டிச்சேரி, மன்னார்குடி, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடின. இத்தொடரில் சிறப்பாக விளையாடிய அதிரை WFC அணி, மூன்றாம் பரிசை தட்டிச் சென்றது.

Read More

தண்ணீரில் தத்தளிக்கும் பிலால் நகர் ! கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகத்தால் மக்கள் பரிதவிப்பு !!

Posted by - September 30, 2019

அதிராம்படடினத்தில் ஒரு பகுதியான ஹஜ்ரத் பிலால் நகர் எரிப்புறக்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியாக உள்ளது மிகவும் தாளவான பகுதி என்பதால் சிறு மழை பெய்தாலே குளம் போல் காட்ச்சியளிக்கும் இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் தேங்கிய நீர் வெளியேற வழியின்றி குட்டைப்போல் காட்ச்சியளித்தன இந்நிலையில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழையால் அப்பகுதி முழுவதிலும் மழை நீரால் சூழபட்டு தீவு போல் காட்ச்சியளிக்கிறது . இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்ச்சி மன்றத்தை அணுகியும் எந்த

Read More

மரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)

Posted by - September 29, 2019

அதிரையில் கல்வித்தந்தை என்ற அழைக்கப்படும் மர்ஹூம் ஹாஜி எஸ்.எம்.எஸ் சேக் ஜலாலுதீன் அவர்களின் குடும்பத்தை சேர்ந்த எஸ். முகமது அஸ்லம் அவர்களின் பேரனும், எம். அப்துல் ஹாதி அவர்களின் மகனுமாகிய ஃபாஹிம் (வயது 19) அவர்கள் இன்று அதிகாலை சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

Read More

கோபம் எதனால் வருகிறது என்று ஒரு ஆராய்ச்சி!!

Posted by - September 28, 2019

அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் தந்திருந்தார்கள். ஒருவர் கூறினார், நான் பணிபுரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை. நான் ஒன்று சொன்னால், அவர்கள் ஒன்று செய்கிறார்கள். இதனால் கோபம் உடனே வந்துடுது என்றார். மற்றொருவர், யாராவது என்னை தவறா சொல்லிட்டாங்கன்னா பட்டுன்னு கோபம் வந்துடும் என்றார். அடுத்தவர், நான் செய்யாததை செய்த மாதிரி சொல்லிட்டாங்கன்னா அவ்வளவுதான் அவங்க என்கிறார். இன்னொருவர், சொன்னதை திரும்ப திரும்ப சொன்னா, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாதுன்னு சொல்றார்.

Read More

‘சென்னை உட்பட 4 நகரங்கள் மூழ்கும்’ – எச்சரிக்கும் ஐ.நா !

Posted by - September 27, 2019

ஐ.நா-வின் காலநிலை மாறுபாடு குறித்து ஆய்வு செய்த ஐ.பி.சி.சி (Intergovernmental Panel on Climate Change -IPCC), அதிர்ச்சிகரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்த நூற்றாண்டின் இறுதியில் இமயமலை வேகமாக உருகி, கடல் நீர் மட்டம் வேகமாக அதிகரிக்கும். இதனால் சென்னை, கொல்கத்தா, மும்பை மற்றும் சூரத் ஆகிய நான்கு கடலோர நகரங்கள் மிக மோசமாகக் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்று அந்த ஆய்வறிக்கை சொல்கிறது. அதே சமயம் வட இந்தியாவின் பல பகுதிகள் மிகக்

Read More

அதிரையில் சுகாதாரப் பணிகள் தீவிரம் !(படங்கள்)

Posted by - September 27, 2019

அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில் அதிரை முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதிரை முழுவதும் கொசு மருந்து அடிப்பது, குப்பைகள் அள்ளப்பட்டு , பிளீச்சிங் பவுடர் அடிக்கப்பட்டு பேரூர் முழுவதும் தூய்மையாக வைக்கப்பட்டுள்ளது.

Read More

நாலா பக்கமும் கிளம்பிய எதிர்ப்பு.. பகவத் கீதை பாட விவகாரத்தில் பின்வாங்கிய அண்ணா பல்கலைக்கலகம் !

Posted by - September 26, 2019

நாலா பக்கம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பவும், “பகவத் கீதையை யாரும் கட்டாய பாடமாக படிக்க வேண்டாம்.. விருப்பம் இருந்தால் படிக்கலாம்” என்று அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா திருப்பி போட்டு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே அமித் ஷா சொன்ன ஒரே நாடு ஒரே மொழி என்ற பேச்சு இன்னும் அடங்காத நிலையில் திடீரென ஒரு அறிவிப்பு வெளியானது. அதாவது, அண்ணா பல்கலைக்கழகத்தின் CEG கேம்பசில் 2019-ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில், தத்துவப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதில், பொறியியல்

Read More

மல்லிப்பட்டிணத்தில் அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லை, பொதுமக்கள் அச்சம்…!

Posted by - September 26, 2019

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தின் பல பகுதிகளில் அதிகரித்து வரும் தெருநாய்களினால் பொதுமக்கள் அச்சம்.தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை. பேருந்து நிலையம்,பள்ளிக்கூடங்கள்,பல தெரு பகுதிகளில் அதிகமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன.இந்த நாய்களின் தோலில் ஒருவித காயங்கள் ஏற்பட்டு உள்ளது.இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.மேலும் இந்த நாய்கள் பொதுமக்கள் நடந்து செல்லும்போதும்,வாகனங்களில் செல்லும்போதும் துரத்துகின்றன.இதனால் பெரும் சிரமத்திற்கும்,வாகன விபத்தையும் சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த ஃபாசில் அகமது தெரிவிக்கையில் நாய்களின் எண்ணிக்கை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)