அதிரை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு !!

Posted by - August 26, 2019

அதிரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை 27-08-2019 மின்சார விநியோகம் நிறுத்தம் மதுக்கூர் மின் நிலையத்தின் அறிவித்துள்ளது மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால். அதிராம்பட்டினம் ,தாமரங்கோட்டை, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை 9மணி முதல் 6 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் நிலையம் தெரிவித்துள்ளது .    

Read More

அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி!!

Posted by - August 26, 2019

அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் சார்பில், வெளிநாடு வாழ் அதிரையர்கள் பங்கேற்புடன் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி அதன் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் எஸ்.பர்கத் தலைமை வகித்தார். செயலாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் என்.ஃபத்ஹுத்தீன் கருத்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் நிர்வாகிகள் மற்றும்  வெளிநாடு வாழ் அதிரை பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)