ராமநாதபுரத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கியது மகளிர் நீதிமன்றம்!!

Posted by - July 31, 2019

ராமநாதபுரத்தில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த செல்வராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

அதிரை WFC தொடர் : கோட்டைப்பட்டினத்திடம் வீழ்ந்தது ஒரத்தநாடு !

Posted by - July 31, 2019

அதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் கடந்த 19/07/2019 தொடங்கியது. இதில் இன்றைய தினம் நடைபெற்ற ஆட்டத்தில் YBR FC ஒரத்தநாடு அணியினரும் முகமது FC கோட்டைப்பட்டினம் அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இறுதி வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பின்னர் நடைபெற்ற ட்ரைபிரேக்கரில் கோட்டைப்பட்டினம் அணி 4-2 என்ற கோல்கணக்கில் YBR FC ஒரத்தநாடு

Read More

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த சரபு நிஸா அவர்கள் !

Posted by - July 31, 2019

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் உமர் லெப்பை அவர்களின் மகளும், ஹாஜா அலாவுதீன் அவர்களின் சகோதரியும், அலி அக்பர் அவர்களின் தாயாரும், சாஹிப் அவர்களின் மனைவியுமாகிய சரபு நிஸா அவர்கள் இன்று மாலை 5.30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று இஷா தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஉமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Read More

அதிரையில் பேரூராட்சி, சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் இமாம் ஷாஃபி பள்ளி இணைந்து நடத்திய மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி !

Posted by - July 31, 2019

அதிராம்பட்டினம் பேரூராட்சி, அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 மற்றும் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை ஆகியவை இணைந்து நடத்திய ‘தூய்மை இந்தியா’ திடக்கழிவு மேலாண்மை கருத்தரங்கம் மற்றும் ‘ஜல்சக்தி அபியான்’ மழைநீர் விழிப்புணர்வு பேரணி நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேரணியில், மாணவர்கள் மூலம் வீடுகளுக்கு சென்று மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய வரைபடம் மற்றும் விதை பந்துகள் வழங்கப்பட்டன. மேலும் இன்று புதன்கிழமை மாணவர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை

Read More

உணவிற்கு மதமில்லை,உணவே ஒரு மதம் தான்- Zomato கொடுத்த பதிலடி…!

Posted by - July 31, 2019

முஸ்லீம் மதத்தை சார்ந்தவர் உணவை டெலிவரி செய்ததாக கூறி அதனை Cancel செய்த நபருக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. மத்தியப்பிரதேச மாநிலம், ஜபல்பூரை சேர்ந்த அமித் சுக்லா என்ற நபர் உணவு டெலிவரி நிறுவனமான ZOMATO மூலம் உணவு ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அப்போது, இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒருவர் உணவை டெலிவரி செய்ய வருவதாக தெரியவந்தது. இதனை அடுத்து, Zomato-விடம் Chat செய்த அமித் சுக்லா, அந்த ஆர்டரை கேன்சல் செய்ய வேண்டும்

Read More

ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டால் நாம் செய்ய வேண்டியதும்; செய்யக்கூடாததும் ! CPR என்றால் என்ன ? ஒரு சிறிய விளக்கம் !!

Posted by - July 31, 2019

அதிரையில் இன்று நம் சகோதரருக்கு ஏற்ப்பட்ட திடீர் மரணம் அனைவரின் மனதையும் பாதித்துள்ளது. மாரடைப்பால் ஏற்பட்ட அந்த மரண காட்சியை பார்த்து பலர் அதிர்ந்து போயிருப்பார்கள். தற்போது உள்ள காலகட்டத்தில், ஒவ்வொரு மனிதனும் அடிப்படை முதலுதவி சிகிச்சை குறித்து தெரிந்து வைத்திருப்பதும், அவசர காலத்தில் பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கக்கூடியவராகவும் இருப்பது அவசியமானதாகும். எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் மாரடைப்பு போன்றவற்றிற்கு அடிப்படை முதலுதவி சிகிச்சை தெரிந்து வைத்திருப்பது மிகவும் இன்றியமையாததாகும். தற்போது அடிப்படை முதலுதவி சிகிச்சையான C.P.R

Read More

அதிரையரின் மருத்துவ சிகிச்சைக்கு உதவிடுவீர் !

Posted by - July 30, 2019

அதிராம்பட்டினம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் இவர் மிகவும் ஏழ்மை குடும்பத்தைச் சார்ந்தவர் அன்றன்று வேலை செய்துதான் தன் குடும்பத்தை நடத்தியுள்ளார். இப்பொழுது உடல் நிலை பாதிக்கப்ட்டு பக்கவாதம் வந்து மருத்துவமனைக்கு மருத்துவ செலவிற்கு பணம் இல்லாததால் வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கிறார் இவரை மதுரை மீனாட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட உள்ளானார். இவருக்கு மருத்துவ செலவிற்காக பண உதவி தேவைப்படுகிறது. நம்மால் முடிந்த அளவு இவருக்கு பண உதவி செய்வோம் கீழே அக்கவுண்ட் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது.

Read More

அதிரை WFC தொடர் : திருச்சி ஜமால் முஹம்மது அணியை வீழ்த்தியது அதிரை WFC !

Posted by - July 30, 2019

அதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் கடந்த 19/07/2019 தொடங்கியது. இதில் இன்றைய தினம் நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்டர்ன் FC அதிராம்பட்டினம் அணியினரும் திருச்சி ஜமால் முஹம்மது அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெஸ்டர்ன் FC அதிராம்பட்டினம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் திருச்சி ஜமால் முஹம்மது அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. நாளையதினம்(31/07/2019) விளையாட

Read More

அதிரை மக்களுக்கு பேரூராட்சி நிர்வாகத்தின் முக்கிய வேண்டுகோள் !

Posted by - July 30, 2019

தமிழகத்தில் பருவமழை சரியாக பெய்யாததால் மாநிலம் முழுவதும் வறட்சி நிலவுகிறது. தலைநகர் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. நிலத்தடி நீர்மட்டத்தின் அளவும் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது. தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனையை சரிசெய்ய தமிழக அரசு, மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக அமல்படுத்திட திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தேர்வுநிலை பேரூராட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள் விடுக்கப்பப்பட்டுள்ளது. அதில், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், வங்கிகள்,

Read More

வேலூர் தொகுதி தேர்தல் – எம்பி வைத்திலிங்கம் தலைமையில் களப்பணியாற்றும் அதிரை அதிமுகவினர் !

Posted by - July 30, 2019

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்ததன் காரணமாக வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது அங்கு ஆகஸ்ட் 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் வேலூரில் முகாமிட்டுள்ளன. அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அதிமுக முன்னணி தலைவர்கள், அமைச்சர்கள் என பலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வேலூரில் ஏ.சி. சண்முகத்திற்கு ஆதரவாக

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)