அதிரையில் 4ஆம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கும் இக்ரா இஸ்லாமிக் பள்ளி !

Posted by - June 18, 2019

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இயங்கி வரும் இக்ரா இஸ்லாமிக் பள்ளி மற்றும் மக்தப் வெற்றிகரமாக 4 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இந்த பள்ளியானது மாணவ, மாணவிகளுக்கு இஸ்லாமிய வழிக்கல்வி மற்றும் ஆங்கில வழிக்கல்வி CBSE பாடத்திட்டத்தில் சிறப்பாக அனுபவம் வாய்ந்த நல்லாசிரியர்களை கொண்டு போதிக்கப்படுகிறது. மும்பையை தலைமை இடமாகக்கொண்டு இந்தியா முழுவதும் 70 க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு இயங்கிவருகிறது. இந்த பள்ளியில் (2019-2020) கல்வியாண்டிற்கான அட்மிஷன் தற்பொழுது “நர்சரி” முதல் நான்காம் வகுப்பு

Read More

அதிரை SSMG கால்பந்து தொடரின் 14-ம் நாள் முடிவுகள் !

Posted by - June 18, 2019

அதிரை இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 25ம் ஆண்டு மற்றும் SSM குல் முகம்மது நினைவு 19ம் ஆண்டு எழுவர் கால்பந்தாட்ட தொடர் போட்டி அதிரை கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று 18/06/2019 நடைபெற்ற ஆட்டத்தில் தென்னரசு கால்பந்து கழகம் பள்ளத்தூர் அணியினரும் ஃப்ரண்ட்ஸ் கால்பந்து கழகம் தஞ்சாவூர் அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தென்னரசு கால்பந்து கழகம் பள்ளத்தூர் அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஃப்ரண்ட்ஸ் கால்பந்து

Read More

மாநகராட்சி ஆகிறது ஆவடி !!

Posted by - June 18, 2019

தமிழகத்தின் 15 வது மாநகராட்சியாக ஆவடியை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதியதாக உதயமாகும் ஆவடி மாநகராட்சியில் ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகளும், திருநின்றவூர் பேரூராட்சியும் வரும். மக்கள் தொகையின் அடிப்படையிலேயே நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும். பொதுவாக மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் குடிநீர், கழிவுநீர் வடிகால், சாலை போன்றவைகளின் கட்டமைப்புகள் தரம் உயரும் அதேபோல் சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகள் அதிகரிக்க வாய்ப்புண்டு. மொத்தம் 148 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டதாக இந்த புதிய

Read More

தமிழ் வாழ்க என்ற தமிழக எம்பிக்கள் – ஜெய் ஸ்ரீராம் என கோஷம் எழுப்பிய பாஜக எம்பிக்கள் !

Posted by - June 18, 2019

மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் கடந்த இரு நாட்களாக பதவி ஏற்று வருகின்றனர். நேற்று முழுவதும் 313 எம்பிக்கள் பதவி ஏற்றனர். இன்று தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் பதவி ஏற்றனர். தாய்மொழியான தமிழ் மொழியில் பதவியேற்ற தமிழக எம்பிக்கள், “வாழ்க தமிழ்”, “வளர்க தமிழ்”, “வாழ்க பெரியார்” என பதவியேற்ற பின் இறுதியாக கூறினர். அப்போது பதிலுக்கு அவையில் இருந்த பாஜக எம்பிக்கள் “ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம்” என்று கோஷமிட்டனர். இதனால் அவையில்

Read More

11, 12ம் வகுப்பு தேர்வு முறைகளில் வருகிறது அதிரடி மாற்றங்கள் !

Posted by - June 18, 2019

தமிழகத்தில் தற்போது பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு 6 பாடங்கள் நடத்தப்படுகிறது. ஏற்கனவே, மொழிப்பாடங்களுக்கு இரண்டு தாள்கள் இருந்த நிலையில், அது இனி ஒரே தாளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டு முதல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட இருக்கின்றன. 6 பாடங்கள் 5 ஆக குறைகின்றன. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் பிளஸ் 1, பிளஸ் 2-வில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)