அதிரை ஈசிஆர் சாலையில் விபத்து !!

Posted by - May 18, 2019

அதிராம்பட்டினம் கீழத்தோட்டத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இன்று சனிக்கிழமை இவர் வேலை நிமித்தமாக அதிரை-முத்துப்பேட்டை ஈசிஆர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். உடனே இவர், அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தினால் அதிரை-முத்துப்பேட்டை ஈசிஆர் சாலையில் சிறிது

Read More

அதிரை கரையூர் தெரு ஸ்ரீசந்தன மாரியம்மன் திருக்கோவிலில் பால்குட விழா !!

Posted by - May 18, 2019

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் ஸ்ரீசந்தன மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இன்று சனிக்கிழமை மாலை உள்ளூர் பால்குட விழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்தனர். இந்த பால்குடமானது அதிரை பிள்ளையார் கோவிலில் ஆரம்பித்து மாரியம்மன் கோவிலில் நிறைவுபெற்றது.

Read More

அதிரை தண்டர் காய்ஸ் : துபையில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது..!

Posted by - May 18, 2019

அதிராம்பட்டினம், மேலத்தெரு இளைஞர்கள் ஒன்றிணைந்து நேற்று (17/05/2019) துபையில் இப்தார் நிகழ்ச்சி நடத்தினார்கள். துபையில் உள்ள முன்ஜார் பூங்காவில் நேற்று (17/05/2019) நோன்பு திறக்கும் (இப்தார்) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மேலத்தெரு இளைஞர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பான முறையில் நோன்பு திறந்தனர். பனிசுமைக்கு இடையில் இப்தார் நிகழ்விற்கு கலந்துகொண்டு பின்பு அன்பை பரிமாறிக்கொண்டனர்.

Read More

முன்னாள் மாணவர்களுக்கான இஃப்தார் அழைப்பு !

Posted by - May 18, 2019

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்களுக்குக்கான நோன்பு திறப்பு (இஃப்த்தார்) நிகழ்வு இன்று 18/05/2019 மாலை சென்னையில் நடைபெற உள்ளது. சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்துகொள்ளும் இந்த நோன்பு திறப்பு நிகழ்வில் ஜமாலியன்கள் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள் . முன்னாள் மாணவர்கள் சார்பில் நடைபெறும் இவ்வைபவத்தில் முன்பதிவு செய்து தவறாது கலந்துக்கொள்ள வேண்டுகிறோம். மேலதிக தகவலுக்கு செந்தமிழ் சுடர் கஜ்ஜாலி முஹம்மது.ஜமாலியன் தொடர்பு எண் : 9994488957

Read More

துபாய் வாழ் மிஸ்கீன் பள்ளி முஹல்லாவாசிகளின் இஃப்தார் நிகழ்ச்சி !!

Posted by - May 18, 2019

துபாயில் உள்ள அதிரை மிஸ்கின் பள்ளி முஹால்லாவாசிகளின் இஃப்தார் நிகழ்ச்சி தேராவில் நடைபெற்றது. துபாய் தேராவில் உள்ள சகோ DJ சாதிக் அவர்களின் ரூமில் நேற்று வெள்ளிக்கிளமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துபாயில் உள்ள அதிரை மிஸ்கீன் பள்ளி முஹல்லாவாசிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)