அதிரையில் பரபரப்பு : கிறிஸ்தவ ஆலயத்தை அடித்து உடைத்த விஷமிகள் !

Posted by - April 30, 2019

அதிராம்பட்டினம் காவல் நிலையம் அருகே அமைந்துள்ளது புனித பாத்திமா அன்னை ஆலயம். இங்கு கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஆலயத்தின் கண்ணாடிகள் அனைத்தும் சில விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிரை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் ஆலயத்திற்குள் புகுந்த விஷமிகள், ஆலயத்தில் இருந்த சிலைகளை அடித்து உடைத்துள்ளனர். இது அதிரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒற்றுமையாக வாழும் ஊரில் கலவரத்தை உருவாக்கி, அதில்

Read More

அதிரையில் பணம் கண்டெடுப்பு!!

Posted by - April 30, 2019

அதிரை ஜாவியா ரோட்டில் உள்ள ஹோண்டா ஷோரூம் அருகே இன்று செவ்வாய்க்கிழமை பகல் ரூ. 1500 கண்டெடுக்கப்பட்டுள்ளது. உரியவர்கள் தகுந்த அடையாளத்தை சொல்லி பெற்றுக்கொள்ளவும். தொடர்புக்கு : 8248725778, +91 90033 71979

Read More

பட்டுக்கோட்டையில் இலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி !!(படங்கள்)

Posted by - April 30, 2019

இலங்கையில் கடந்த வாரம் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 300க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். இதனையடுத்து இலங்கை முழுவதும் பாதுகாப்புப்படை வீரர்கள் குவிக்கப்பட்டு, கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், பலியான அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இன்று செவ்வாய்க்கிழமை அமைதி பேரணி நடைபெற்றது. பட்டுக்கோட்டை பங்கு தந்தை மற்றும் அனைத்து கிறிஸ்தவ சபை குருமார்கள் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் அனைத்து கிறிஸ்தவ மக்களும் கலந்துகொண்டனர்.

Read More

அதிரை WCC கிரிக்கெட் தொடரின் ஒன்பதாம் நாள் முடிவுகள் !!

Posted by - April 30, 2019

அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் 22-ஆம் ஆண்டு மாநில  அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 22/04/2019 அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஒன்பதாம் நாள் ஆட்டமாக இன்று ஒரு ஆட்டம் நடைபெற்றது.   இதில் அதிரை WCC அணியினரும் செருவாவிடுதி அணியினரும் மோதினர். முதலில் பேட் செய்த  அதிரை WCC அணி 18.1ஓவர்களில் பத்து  விக்கெட் இழப்பிற்க்கு  136 ரன்கள் குவித்தனர். பின்னர் 137 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  செருவாவிடுதி அணியினர் 

Read More

அதிரை அருகே இறந்தவரின் கண்கள் தானம் !

Posted by - April 30, 2019

பட்டுக்கோட்டை வட்டம் தம்பிக்கோட்டை மேலக்காடு கிராமத்தை சேர்ந்த விநாயக தேவர் (88). இன்று 30.04.2019 செவ்வாய்க்கிழமை காலை வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார். அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் அவரது இரண்டு கண்கள், குடும்பத்தார்கள் சம்மதத்துடன் தானமாக பெறப்பட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின், கும்பகோணம் கண் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் பேராசிரியர் அப்துல்காதர் செயலாளர் அப்துல் ரஹ்மான், பொருளாளர் அப்துல் ஜலீல், அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்ற

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)