ஆபத்து நீங்க அனைத்து பள்ளிகளிலும் குனூத் ஓத வேண்டும் என அதிரை எக்ஸ்பிரஸ் வாசகி வேண்டுகோள் !!

Posted by - April 25, 2019

மணமேல்குடி -அதிராம்பட்டினம் இடையே ஃபாணி புயல் கரையைக் கடக்கும் என பரவலாக கூறப்பட்டு வரும் இவ்வேளையில் அரசுத்துறை இதுவரை எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை. தொலைக்காட்சி சமூக ஊடகங்களில் வரும் செய்திகளால் அதிராம்பட்டினம் பகுதி வாழ் மக்கள் மிகுந்த அச்சத்தினால் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். கஜா புயலின் தாக்கத்திலிருந்து மீளாத மக்களின் மீது இன்னொரு இயற்க்கையின் தாக்குதலா? என இறைவனின் உதவியை நாடி பிரார்த்தனைகள் செய்த வன்னம் உள்ளனர். இதனிடையே அதிரை எக்ஸ்பிரஸை செல்போன் வாயிலக

Read More

அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் கிரிக்கெட் தொடரின் 4ம் நாள் முடிவுகள் !!

Posted by - April 25, 2019

அதிரை வெஸ்டர் ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் 22-ஆம் ஆண்டு மாநில  அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி  22/04/2019 அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நான்காம் நாள் ஆட்டமாக இரு ஆட்டங்கள் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் TRPCC அணியினரும்   , VBCC அதனக்கோட்டை அணியினரும் மோதினர். முதலில் பேட் செய்த TRPCC காரைக்கால் அணி 20 ஓவர்களில் 148 ரன்கள் குவித்தனர். பின்னர் 149 எடுத்தால் வெற்றி என்ற

Read More

பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு கையூட்டு வாங்குகிறதா அதிரை பேரூராட்சி ?

Posted by - April 25, 2019

உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலில் உள்ளது. அதன்படி பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வாழை இலைகள், துணிப்பை போன்றவைகள் தமிழகத்தில் புழக்கத்திற்கு வந்துவிட்டன. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அரசின் உத்தரவை மீறி சட்டத்திற்கு புறம்பாக பிளாஸ்டிக் பயன்பாடு இன்றளவும் இருந்து வருகிறது. மார்க்கெட்டுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிரை பேரூராட்சியின் செயல் அலுவலர் ரமேஷ் மற்றும்

Read More

அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி ! உரியவரிடம் வாகனம் ஒப்படைப்பு !!!

Posted by - April 25, 2019

  இன்று காலையில் கேட்பாரற்று கிடக்கும் மொபட் என்ற தலைப்பில் செய்தியாக பதியப்பட்டு இருந்த நிலையில் சமூக ஊடக வாயிலாக வாசகர்களால் பரப்பப்பட்டது . இந்நிலையில் ,வாகனத்தி உரிமையாளர் செய்தியரிந்து ஆவணங்களை காண்பித்து வண்டியை பெற்று சென்றார்.

Read More

அதிரையில் வெடிகுண்டுடன் விமானம் விழுந்ததாக பரவும் செய்தி உண்மையா ?

Posted by - April 25, 2019

அதிரையில் தமிழக கடலோர காவல்படையின் சார்பில் நேற்று சிறிய ரக விமானம் ஒன்று சோதனை முயற்சியாக பறக்கவிடப்பட்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம், அதிரை காந்தி நகர் மார்க்கெட்டில் உள்ள மின்கம்பம் மீது விழுந்தது. உடனே அதனை கடலோர காவல்படையினர் மீட்டு கொண்டுச் சென்றனர். இந்நிலையில் அந்த சிறிய விமானம் விழுந்த புகைப்படத்துடன் வாட்ஸ்ஆப்பில் ஆடியோ ஒன்றும் அதிரை முழுவதும் பாரஃவி வருகிறது. அந்த ஆடியோவில் பேசும் நபர், விமானத்தில் வெடிகுண்டு உள்ளிட்டவை உள்ளதாக கூறுகிறார்.

Read More

Breaking : அதிரையில் தீ விபத்து !!

Posted by - April 25, 2019

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் புதுக்குடி நெசவுத்தெருவில் இன்று வியாழக்கிழமை(25/05/2019) பிற்பகல் குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வாகனம் வர சற்று தாமதமானதால் பொதுமக்களே தீயை அணைக்கும் பணியில் களமிறங்கினர். பின்னர் தீயணைப்பு வாகனம் வந்ததும் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. குடும்பத்தகராறு காரணமாக குடிசை வீட்டிற்கு தீ வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தீ மளமளவென பற்றி எரிந்ததால் குடிசை முழுவதும் எரிந்து தீக்கிரையானது.

Read More

அரசு உத்தரவை மீறும் தனியார் பள்ளிகள் நடவடிக்கை எடுக்குமா பள்ளி கல்வித்துறை…?

Posted by - April 25, 2019

உடல் வெந்துவிடும் அளவுக்கு தமிழகத்தில் கடுமையான வெயில் கொளுத்துகிறது. இந்த உக்கிரத்தை பெரியவர்களே தாங்க முடியாமல் தகிக்கிறார்கள். மென்மையான உடல் அமைப்புக்கொண்ட மாணவர்கள் நிலை சொல்லி தெரிய வேண்டியது இல்லை. தேர்தல் மற்றும் கோடை வெயில் என கூறி அனைத்து பள்ளிகளும் விடுமுறை என்றும், இந்த விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடைப்பெற கூடாது’ என்றும் பள்ளிகளுக்கு தமிழக அரசு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ‘ பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்

Read More

அதிரை : பர்ஸ் காணவில்லை !

Posted by - April 25, 2019

அதிராம்பட்டினம் செய்யது முஹம்மது அவர்களின் மணி பர்ஸ் இன்று காலை மீன் மார்க்கெட்டில் தவிர விட்டுள்ளார். அதில் ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவைகளின் அசல் இருந்துள்ளன,அத்துடன் ₹2000 ரூபாய் ரொக்க பணமும் ஆகியன இருந்துள்ளது . எனவே மேற்குறிப்பிட்ட பர்சை கண்டெடுத்தவர்கள் கீழ்காணும் நம்பருக்கு தொடர்புக்கொண்டு ஒப்படைக்க தவரவிட்டவர் கேட்டுக்கொண்டுளார். 8667390011 9600866164

Read More

அதிரை:கேட்பாரற்று கிடக்கும் மொபட் !

Posted by - April 25, 2019

  அதிராம்பட்டினம் புதுத்தெரு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக xL (பவர் கியர்) ஊதா நிறம் கொண்ட மொபட் ஒன்று கேட்பாரற்று கிடக்கிறது . இந்த மொபட்டின் முன் பகுதி உடைந்த நிலையில் உள்ளது . இந்த வாகனத்தை யாரும் திருடி வந்து விட்டு சென்றனரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் அப்பகுதி வாழ் மக்களிடம் நிலவி வருகிறது . இதனால் இந்த வாகனம் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது .

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)