அதிரையில் கள்ள ஓட்டு ?

Posted by - April 18, 2019

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிற்குட்பட்ட அதிராம்பட்டினத்தில் பொட்டு என்கிற மூதாட்டி இன்று வாக்கு அளிக்க வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். அப்போது, அவரது ஓட்டை ஏற்கனவே மற்றோருவர் செலுத்தி விட்டதால், வாக்களிக்க முடியாது என்றும், மூதாட்டியை வீட்டுக்கு செல்லுமாறும் அதிகாரிகள் கூறியதாகவும் கூறப்படுகிறது. அதற்கு அந்த மூதாட்டி தன்னிடம் அனைத்து ஆவணங்களும் உள்ளன. ஏன் என்னால் வாக்களிக்க முடியாது என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கோபமடைந்த அந்த மூதாட்டி வாக்குச்சாவடி மையத்தின் வெளியே தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் அவரை

Read More

ஊடக பணிக்கு மத்தியிலும் ஜனநாயகக் கடமையாற்றிய அதிரை எகஸ்பிரஸ் நிருபர்கள்!!

Posted by - April 18, 2019

நாட்டில் 17 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11 ம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று இரண்டாம் கட்டத் தேர்தல் தமிழகம்,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்றது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது. இந்த 17வது மக்களவை தேர்தலில் வாக்களிக்க ஏராளமானோர் வெளியூர்களில் இருந்து தனது சொந்த ஊர்களுக்கு சென்று தனது ஜனநாயகக் கடமையினை நிறைவேற்றினர். ஊடக விமர்சன பணிகளுக்கு மத்தியிலும்,

Read More

அதிரையில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தீவிரம் !!

Posted by - April 18, 2019

அதிரையில் காலை 7 மணி முதலே நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. பகல் 1 மணிக்கு மேல் வாக்குப்பதிவு திடீரென மந்தமானது. கோடை வெயில் கொழுத்தியதால், வாக்காளர்கள் வீடுகளிலேயே முடங்கினர். இந்நிலையில் வெயில் சற்று குறைந்துள்ளதாலும், வாக்குப்பதிவு நேரம் முடிவடைய உள்ளதாலும், தற்போது வாக்குச்சாவடிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. வாக்காளர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

Read More

உ.பி., பீகார் நிலைக்குத் தள்ளப்பட்ட தமிழகம் !

Posted by - April 18, 2019

நாடு முழுக்க லோக்சபா தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தற்போது நடைபெறுகிறது. மொத்தம் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 95 தொகுதிகளில் இந்த தேர்தல் நடக்கிறது. புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்கிறது. இந்த நிலையில் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக மக்கள் பல்வேறு நகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு கிளம்பி சென்றனர். ஆனால் வாக்களிக்க செல்லும்

Read More

“அட்மினை” அனுப்பாமல் தானாக வந்து தனது வாக்கை பதிவு செய்த எச்.ராஜா..!!

Posted by - April 18, 2019

4 நாளைக்கு முன்னாடியே பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில் சிவகங்கை தொகுதி மக்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என்று சொல்லி தந்தார். “18-ந் தேதி.. வாக்கு இயந்திரத்தில் 3-வதாக தாமரை சின்னம் இருக்கும்.. அதுக்கு நேரா இருக்கிற பட்டனை அழுத்தி.. என்னை வெற்றி பெற செய்யுங்க” என்று டெமோ காட்டி எச்.ராஜா ஒரு பாடமே நடத்தி இருந்தார். இதற்கு சிவகங்கை தொகுதி மக்களே நிறைய ஆதரவு, எதிர்ப்புமாக கமெண்ட்களை போட்டிருந்தனர். இந்நிலையில்,

Read More

சுட்டெரிக்கும் வெயிலில் வரிசையில் நின்று வாக்களிக்கும் அதிரை வாக்காளர்கள் !!

Posted by - April 18, 2019

நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழகம், புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிற்குட்பட்ட அதிராம்பட்டினத்தில் இன்று காலை 7 முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது, வரிசையில் நின்று இளைஞர்கள், பெண்கள், முதியோர்கள் என அனைவரும் தங்களுடைய வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.

Read More

பொன்னவராயன்கோட்டை முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ராஜகுமார் மறைவு !!

Posted by - April 18, 2019

பொன்னவராயன்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தவர் V. ராஜகுமார். திமுகவைச் சேர்ந்த இவர், நேற்று புதன்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு பொதுமக்களும், உறவினர்களும் இரங்கல் தெரிவித்து, இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அன்னாரின் நல்லடக்கம் இன்று வியாழக்கிழமை மதியம் 3 மணியளவில் நடைபெற உள்ளது.

Read More

தாமரங்கோட்டை மகேந்திரன் ஜனநாயக கடமையை ஆற்றினார்!!

Posted by - April 18, 2019

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றியை இழந்த மகேந்திரன் தற்போது விவசாய அணியின் முக்கிய பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதறக்காக சொந்த ஊர் திரும்பிய அவர் இன்று காலையிலேயே வாக்கு செலுத்தினார். பின்னர் அவர் கூறுகையில், நாட்டில் நல்லாட்சி மலர இத்தருணத்தில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வாக்காளர்களை கேட்டு கொண்டார்.

Read More

திமுக கலை இலக்கிய பகுத்தறிவு அமைப்பின் பொறுப்பாளர் பழஞ்சூர் செல்வம் வாக்களித்தார் !!

Posted by - April 18, 2019

மக்களவைக்கான வாக்கு பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முக்கிய தலைவர்கள் அவரவர்கள் சார்ந்த தொகுதிகளில் வாக்கு செலுத்தி வருகின்றனர். தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று காலையிலேயே வாக்கை பதிவு செய்தனர். அதன்படி இன்று காலை கலை இலக்கிய பகுத்தறிவை பிரிவு பொறுப்பாளர் பழஞ்சூர் செல்வம் தனது கட்சி நிர்வாகிகளுடன் தனது வாக்கை செலுத்தினார்.

Read More

அதிரை: திமுகவுக்கு மட்டும் விதிவிலக்கா ?

Posted by - April 18, 2019

தேர்தல் ஆணையம் உத்தரவு பிரகாரம் வாக்கு சாவடிக்குள் செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை. ஆனால் இன்று காலை முதல் அதிராம்பட்டினம் பகுதிகளில் ஒருசில கட்சியினர் மட்டும் வாக்கு பதியும் காட்சிகளை புகைப்படம் எடுத்து இணையப் பக்கங்களில் உலாவ விட்டு வருகின்றனர். இது ஆணையத்தின் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது ஆகும் என்கின்றனர் வாக்காளர்கள்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)