அதிரை மின்சார வாரியத்தின் முக்கிய அறிவிப்பு..!!

Posted by - April 16, 2019

நேற்று(15-04-2019) இரவு மதுக்கூர் அருகே மின்வாரியத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது..இதனால் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள், வணிகர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகிவுள்ளனர்… இதனால் இன்றும்(16-04-2019) மின்சாரம் இல்லாமல் இரண்டாம் நாளும் இரவில் மூழ்கியுள்ளது. இதனிடையே அதிரை மின்சாரம் வாரியம் ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்று (16-04-2019) இரவு 12 மணியளவில் மின்சாரம் வழங்கவுள்ளதாகவும். அதனால் வீட்டில் பயன்படுத்துகின்ற ஏசி, குளிர் சாதன பெட்டி, டிவி

Read More

அதிரையில் துரெளபதையம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா!!

Posted by - April 16, 2019

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெருவிலுள்ள துரெளபதையம்மன் கோயிலில் (15.04.2019) திங்கள்கிழமையன்று அக்னி வசந்த உற்சவம் (தீ மிதியல்) திருவிழா சிறப்புற நடைபெற்றது. இத்திருவிழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக சன் டிவி கலக்கப்போவது யார் புகழ். கோவை அசோக் குழுவினரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது மேலும் இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்…

Read More

மரண அறிவிப்பு : தரகர்தெருவைச் சேர்ந்த கருசா அம்மாள் அவர்கள் !

Posted by - April 16, 2019

மரண அறிவிப்பு : தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது நெய்னாமலை அவர்களின் மகளாரும், மர்ஹூம் மாம்சா ராவுத்தர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் K.M. காதர் முகைதீன், K.M. சுலைமான், K.M. முகமது ஆகியோரின் சகோதரியுமாகிய கருசா அம்மாள் அவர்கள் இன்று மாலை 3.15 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று(16/04/2019) இரவு 9 மணியளவில் தரகர் தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை

Read More

அதிரை எக்ஸ்பிரஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

Posted by - April 16, 2019

அதிரை எக்ஸ்பிரஸ் ஆரம்பித்து 12ஆண்டுகளை கடந்து 13 வது ஆண்டின் அடியெடுத்து வைத்துள்ளது. உள்ளதை உள்ளப்படி சத்தியத்தை சளைக்காமல் சொல்வதில் அதிரை எக்ஸ்பிரஸ் எப்பொழுதும் தயங்கியது இல்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிராம்பட்டினம் தேர்வுநிலை பேரூராட்சியில் அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் என கூறிக்கொண்டு அங்குள்ள அதிகாரிகளிடம் வம்பிழுத்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளன. குறிப்பாக அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர்கள் மக்கள் பிரச்சனைகளை கையாளும் போது நெறிகளுக்குட்பட்டு தான் கையாள அவர்களுக்கு பயிற்று விக்கப்பட்டுள்ளன குறிப்பாக அரசுத்துறை

Read More

தேர்தல் தொடர்பாக பேட்டி அளிக்க அரசியல் தலைவர்களுக்கு தடை!

Posted by - April 16, 2019

பிரச்சாரம் ஓய்ந்ததும், அரசியல் தலைவர்கள் தேர்தல் தொடர்பாக பேட்டி அளிக்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.  கடந்த சில வாரங்களாக கோடைவெயிலை மிஞ்சும் அளவிற்கு அனல் பறந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. இறுதி நாளான இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில், பிரச்சாரம் ஓய்ந்ததும், அரசியல் தலைவர்கள் தேர்தல் தொடர்பாக பேட்டி அளிக்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக

Read More

தமிழன்னை கைப்பந்து கழகம் நடத்தும் மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி..!!

Posted by - April 16, 2019

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் பேய்க்கரும்பன்கோட்டையில் தமிழன்னைக் கைப்பந்து கழகம் நடத்தும் 19ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி வருகின்ற 17.05.2019 வெள்ளிக்கிழமை இரவு 9 மனியளவில் தொடங்க உள்ளது. இத்தொடர் போட்டிக்கு நுழைவுகட்டனமாக ரூபாய் 100 பெறப்படுகிறது. இந்த மாபெரும் கைப்பந்து தொடர் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசு பட்டியல் : ●முதல் பரிசாக ரூபாய் 20,000 வழங்கப்படுகிறது. ●இரண்டாம் பரிசாக ரூபாய் 18,000 வழங்கப்படுகிறது. ●மூன்றாம் பரிசாக ரூபாய் 16,000 வழங்கப்படுகிறது.

Read More

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா!! தேரோட்டம் தொடக்கம்!!

Posted by - April 16, 2019

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழாவையொட்டி முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Read More

தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த வெளியாட்கள் இன்று மாலையுடன் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்!!

Posted by - April 16, 2019

தொகுதிக்கு வெளியே இருந்து பிரசாரத்துக்காக அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சி பணியாளர்கள், தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் இன்று மாலை 6 மணிக்கு பிறகு தொகுதியைவிட்டு வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் மக்களவை பொதுத்தேர்தல்கள் மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுதினம் (18ம் தேதி) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையும்,

Read More

பாம்பன் பாலத்தில் புதிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டது!!

Posted by - April 16, 2019

ராமேஸ்வரம் அருகே பாம்பன் சாலை பாலத்தில் 60 லட்சம் ரூபாயில் புதிய மின் விளக்கு பொருத்தப்பட்டது. பாம்பன் கடல் மீது அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் மூன்றாண்டகளுக்கு முன்பு 18.56 கோடி ரூபாயில் மராமத்து செய்து பாலத்தின் இருபுறமும் 420 மின்விளக்குகள் பொருத்தினர். தரமற்ற பணியால் இரண்டு ஆண்டகளுக்கு முன்பு மின்விளக்குகள் பழுதாகி, பாலம் இருளில் மூழ்கியது. இந்நிலையில் பாலத்தின் தென்பகுதியில் 60 லட்சத்தில் புதியதாக 70 மின் விளக்குகள் பொருத்தும் பணி இரண்டு மாதங்களுக்கு முன்பு

Read More

வாக்காளர் உணர்வு!! ஆக்கம் அதிரை அன்சாரி!!

Posted by - April 16, 2019

தேர்தல் என்பது காங்கிரஸா அல்லது பாஜகவா ? என்பது அல்ல!! ஜனநாயகமா அல்லது சர்வாதிகாரமா என்பதுதான்…!! நாட்டை துண்டாடுவது ஹிந்துத்துவா வா அல்லது ஜனநாயகமா என்பதுதான்…!! இந்தியாவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதனால் முஸ்லிம்களுக்கு எந்த ஒரு உபயோகமும் கிடையாது… முஸ்லிம்களாகிய நாங்கள் அரசு வேலையோ, அரசாங்க உதவிகளையோ எதிர்பார்ப்பது கிடையாது. இஸ்லாமிய மக்களுக்களின் உரிமைகளுக்காக தன்னலமின்றி பாடுபடும் எந்த பாராளுமன்ற உறுப்பினரோ (MP), சட்டமன்ற உறுப்பினரோ (MLA) எங்களுக்காக யாரும் இந்த நாட்டில் இல்லை.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)