பட்டுக்கோட்டையில் நாடியம்மன் கோவில் தேரோட்டம் !!

Posted by - April 11, 2019

பட்டுக்கோட்டையில் புகழ்பெற்ற நாடியம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. பட்டுக்கோட்டை வடசேரி ரோட்டில் உள்ள தேரடித் தெருவில் தொடங்கிய தேரோட்டம், வடசேரி முக்கம், பெரிய கடைத்தெரு மற்றும் போஸ்ட் ஆபீஸ் வழியாக இழுத்து வந்து நிறுத்தப்பட்டது. மேலும் நாளை மாலை 3 மணியளவில் மீண்டும் தொடங்கும் தேரோட்டம், தேரடித்தெருவிற்கு கொண்டு சென்று நிறுத்தப்படவுள்ளது. இந்த தேர்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதனால் இன்று பட்டுக்கோட்டை நகரமே விழாக்கோலமாக காணப்பட்டது.

Read More

அதிரை AFCC கிரிக்கெட் தொடரின் 6ம் நாள் முடிவுகள் !!

Posted by - April 11, 2019

அதிரை ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப்(AFCC) நடத்தும் 14-ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி நேற்று 06/04/2019 அதிரை கிராணி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று(11/04/2019) காலை போட்டி நடைபெறவில்லை. மதியம் நடைபெற்ற ஆட்டத்தில் AFCC SOLDIERS மற்றும் ARJ கல்லூரி அணியினர் மோதினர். டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த AFCC Soldiers அணியினர் 85 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தனர். பின்னர் 86 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய

Read More

தஞ்சை மாவட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம். காதர் முகைதீன் தீவிர பிரச்சாரம் !!

Posted by - April 11, 2019

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார பரப்புரை தீவிரம் அடைந்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், தங்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணியில் தஞ்சை தொகுதி வேட்பாளராக முன்னாள் மத்திய இணையமைச்சர் S.S. பழனிமாணிக்கம் போட்டியிடுகிறார். இந்நிலையில் SS. பழனிமாணிக்கத்திற்கு ஆதரவாக இன்று வியாழக்கிழமை தஞ்சை மாவட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர். கே.எம். காதர் முகைதீன் பிரச்சாரம் மேற்கொண்டார். தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம்,

Read More

மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த NMS. அன்சாரி அவர்கள் !

Posted by - April 11, 2019

மரண அறிவிப்பு : மேலத்தெரு சூனா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் நெய்னா முகமது அவர்களின் மகனும், ஹாஜி நெ.மு.செ முகமது ஹனீபா அவர்களின் மருமகனும், மர்ஹூம் சேக் மதினா அவர்களின் சகோதரரும், அப்துல் ஜப்பார், இம்ரான் கான் இவர்களின் தகப்பனாரும், மர்ஹூம் ஹபீப் ரஹ்மான், சகாபுதீன், ராஜிக் அகமது ஆகியோரின் மச்சானுமாகிய NMS. அன்சாரி(வயது 67) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

Read More

அமமுக வேட்பாளரை நேரில் சந்தித்த காதிர் முஹைதீன் கல்லூரி நிர்வாகிகள்..!

Posted by - April 11, 2019

தஞ்சை அமமுக வேட்பாளர் முருகேசன் அவர்களை நேற்று(10/04/2019) MKN ட்ரஸ்ட் நிர்வாகிகள் நேரில் சென்று வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர். தஞ்சை நாடாளுமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் பொன்.முருகேசன் அவர்களை மரியாதை நிமிதமாக காதிர் முகைதீன் கல்லூரியின் MKN ட்ரஸ்ட் நிர்வாகி ஆஷிக் அஹமது மற்றும் முன்னாள் நிர்வாகி ஜனாப். ரபீக் அஹமது ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Read More

வாக்குச்சாவடியில் “நமோ” உணவு பார்சல்… போலீஸே விநியோகம் செய்த கொடுமை…!

Posted by - April 11, 2019

இன்று நாடு முழுக்க லோக்சபா தேர்தல் முதற்கட்டமாக நடந்து வருகிறது. மொத்தம் 91 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. ஆந்திர பிரதேசம், அருணாசலப்பிரதேசம், உத்தரகாண்ட், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், அந்தமான் மற்றும் நிக்கோபார், லட்சத்தீவு, தெலுங்கானா, அசாம், பீகார், சட்டீஸ்கர், ஜம்மு காஷ்மீர், மஹாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, திரிபுரா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தல் நடக்கிறது. இதில் உத்தர பிரதேசத்தில் முதற்கட்டமாக 8 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. அதில் நொய்டா தொகுதியும்

Read More

அதிரையில் திமுக வேட்பாளர் SS. பழனிமாணிக்கம் தீவிர வாக்கு சேகரிப்பு !!(படங்கள்)

Posted by - April 11, 2019

நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று பல்வேறு மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரை இரண்டாம் கட்டத் தேர்தலாக வருகிற 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரப் பணிகளில் அரசியல் கட்சியினர் படு தீவிரமாக இறங்கியுள்ளனர். அந்த வகையில் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக முன்னாள் மத்திய இணையமைச்சர் S.S. பழனிமாணிக்கம் போட்டியிடுகிறார். தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வரும் அவர், இன்று வியாழக்கிழமை

Read More

அதிரையில் ஹூசைன் மன்பயீ ஜூம்ஆ பயான் மற்றும் பெண்களுக்கான சிறப்பு பயான்…!

Posted by - April 11, 2019

அதிராம்பட்டினத்தில்  நாளை 12/4/2019 வெள்ளிக் கிழமை அன்று AL ஜும்மா பள்ளியில் சகோ. ஹூசைன் மன்பயீ அவர்கள் ஜீம்மா உரையாற்றுகிறார். மேலும் கஜா புயலால் பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையம் சிதலமடைந்தது.இதனால் அங்கு நடைபெற்று வந்த பயான் நிறுத்தப்பட்டிருந்தது.இந்நிலையில் இஸ்லாமிய பயிற்சி மையம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது,எனினும் நாளை மாலை 5 மணி அளவில் பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் பெண்கள்கான சிறப்புப் பயானும் நடைப்பெறும் அனைவரும் தவறாது கலந்துக்கொண்டு சிறபிக்க வேண்டுகிறோம்.

Read More

மரண அறிவிப்பு ~ ஒஜிஹா அம்மாள் அவர்கள் !

Posted by - April 11, 2019

மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த கச்சா கடை மர்ஹூம் நெய்னா முகமது அவர்களின் மகளும், மர்ஹூம் எம்.எம். சம்சுதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் என். சாகுல் ஹமீது, மர்ஹும் முகமது முகைதீன், அபுல் ஹசன், அப்துல் ரெஜாக், தாஜுதீன் ஆகியோரின் சகோதரியும், அப்துல் நவாஸ் அவர்களின் மாமியாரும், அல் அமீன், சமீர்கான், நவீத் அகமது, ஆகியோரின் பாட்டியாரும், நவ்ரஸ் எஸ். பகுருதீன், ஹைதர் அலி ஆகியோரின் தாயாருமாகிய ஒஜிஹா அம்மாள் (வயது 75) அவர்கள் நேற்று இரவு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)