அதிரையில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு..!!

Posted by - April 10, 2019

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் வார்டு 16 மற்றும் 17வது மேலத்தெரு பகுதியில் இன்று(10/04/2019) திராவிட முன்னேற்ற கழகத்தினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வீடு வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். திமுக தஞ்சை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமானிக்கம் அவர்களுக்கு வாக்களிமாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில், திமுக அதிரை பேரூர் தலைவர் இராம குணசேகரன் தலைமையில், முன்னாள் அதிரை சேர்மன் அஸ்லம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Read More

அதிரை AFCC கிரிக்கெட் தொடரின் 5ம் நாள் முடிவுகள் !!

Posted by - April 10, 2019

அதிரை ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப்(AFCC) நடத்தும் 14-ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி நேற்று 06/04/2019 அதிரை கிராணி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று(10/04/2019) நடைபெற்ற ஆட்டத்தில் VSD தஞ்சாவூர் மற்றும் TLCC பட்டுக்கோட்டை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த VSD அணி 63 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அடுத்து களமிறங்கிய TLCC அணி 3.4 ஓவர்களில் 65 ரன்கள் எடுத்து அபார வெற்றி அடைந்தது.

Read More

அதிரை மாணவர் சங்கத்தினரை நேரில் சென்று ஆதரவு கோரிய அமமுகவினர்..!

Posted by - April 10, 2019

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டிணத்தில் இன்று(10/04/2019) அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நாடாமன்ற தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் முருகேசனுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு அதிரை மாணவர் சங்கத்தின் நிர்வாகிகளை நேரில் சந்தித்தனர். அதிரை அமமுகவினர் மாணவர் சங்க நிர்வாகிகளை நேரில் சந்திக்கையில் அமமுக தஞ்சை மாவட்ட செயலாளர் மா.சேகர் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் ஆதரவு திரட்டினார். மேலும், கல்லூரி மாணவர்களுக்கு பேருந்து வசதிகள் போன்றவைகள் செய்துதரப்படும் எனவும் வாக்குறுதி அளித்தனர். இந்நிகழ்வில், அதிரை மாணவர் சங்க நிர்வாகிகள்

Read More

அதிரையில் திமுக வேட்பாளர் S.S. பழனிமாணிக்கத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரக்கூட்டம் !!

Posted by - April 10, 2019

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார பரப்புரை தீவிரம் அடைந்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், தங்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணியில் தஞ்சை தொகுதி வேட்பாளராக முன்னாள் மத்திய இணையமைச்சர் S.S. பழனிமாணிக்கம் போட்டியிடுகிறார். இந்நிலையில் SS. பழனிமாணிக்கத்திற்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சியின் ஊடக பொறுப்பாளர் தோழர் லெனின் இன்று புதன்கிழமை மாலை 5 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் பரப்புரை மேற்கொண்டு வாக்குகள் சேகரித்தார். இந்த

Read More

ரபேல் விவகாரத்தில் மத்திய அரசுக்கு பெரும் அடி… அனில் அம்பானி நியமனம் குறித்தும் விசாரிக்கப்போவதாக சுப்ரீம்கோர்ட் அதிரடி அறிவிப்பு…!

Posted by - April 10, 2019

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போட்டது மத்திய அரசு ! ஆனால் இதில் ஊழல் நடந்துள்ளதாக, காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே இந்த விவகாரத்தை காங்கிரஸ் மிகப்பெரிய ஆயுதமாக வலுவாக கையில் வைத்து கொண்டது. அதனால்தான் நாடாளுமன்றத்தில் பெரிதாக இந்த விவகாரத்தை வெடிக்கவும் செய்தது. பிரதமரை நேரடியாக சுட்டிக்காட்டி தாறுமாறாக விமர்சித்தது. குறிப்பாக, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக பிரதமர்

Read More

திமுக கூட்டணிக்கு ஆதரவு கேட்டு மமக பொதுச்செயலாளர் அதிரையில் பிரச்சாரம்!!

Posted by - April 10, 2019

அதிராம்பட்டினம்: மதசார்பற்ற ஜனநாயக கூட்டனியான திமுக தஞ்சை நாடாளுமன்ற வேட்பாளர் S.S. பழனி மானிக்கத்தை ஆதரித்து கூட்டனி கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் கூட்டனி கட்சியான மமகவின் சார்பில் ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் அனல் பறக்கும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதன்படி தஞ்சை தெற்கு மாவட்ட மமக சார்பில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற வாக்கு சேகரிப்பு கூட்டத்தில் செ.ஹைதர் அலி கலந்துகொண்டு உறையாற்றுகையில், மத்தியில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)