அதிரை AFCC கிரிக்கெட் தொடரின் இரண்டாம் நாள் முடிவுகள் !!

Posted by - April 7, 2019

அதிரை ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப்(AFCC) நடத்தும் 14-ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி நேற்று 06/04/2019 அதிரை கிராணி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய(07/04/2019) இரண்டாம் நாள் ஆட்டத்தில் காலை TR CC அணியினரும் செருவாவிடுதி அணியினரும் விளையாடினர். இதை முதலில் பேட் செய்த செருவாவிடுதி அணி 88 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய TR CC அணி, 7 விக்கெட் இழந்து 89 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Read More

அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் !!(முழு விவரம்)

Posted by - April 7, 2019

அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மார்ச் மாத ஆலோசனை கூட்டம் அதன் அலுவலகத்தில் கடந்த 31.03.2019 சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் தலைவர் பேராசிரியர் பர்கத் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஹாஜா முகைதீன் வரவேற்புரை ஆற்றினார். துணைத் தலைவர் அப்துல் மாலிக் கிராஅத் ஓதினார். செயலாளர் அப்துல் ஹமீது அறிக்கை வாசித்தார். இறுதியாக துணைப் பொருளாளர் முகமது முகைதீன் நன்றியுரை வாசித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. தீர்மானம் :

Read More

அதிரையில் திடக்கழிவு என்னும் பெயரில் வரி வசூலிக்கும் பேரூராட்சி…எதற்கு என தெரியாமல் பணம் செலுத்தும் மக்கள் !!

Posted by - April 7, 2019

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சியில் கடந்த ஆண்டுக்கான(2018-2019) தண்ணீர் வரி, சொத்து வரி, வீட்டு வரி ஆகியவை செலுத்தாத பொதுமக்களிடம் நேரடியாக அவர்களின் வீட்டுக்கே சென்று பணம் செலுத்தும் முறையை அதிரை பேரூராட்சி நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. அதிரை பேரூராட்சியால் ஓரு அமைப்பைக் கொண்டு செயல்படுத்தப்படும் இந்த வரி வசூலித்து முறையில், நேரிலேயே பணத்தை பெற்றுக்கொண்டு உடனே ரசீதும் கொடுக்கப்படுகிறது. ஆனால் அவ்வாறு வசூலிக்கும்போது திடக்கழிவு என்னும் பெயரில் தனியாக பணம் வசூலிப்பதாகவும், அதுகுறித்து பொதுமக்கள் கேள்வி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)