தேர்தல் பிரச்சாரத்தில் கேள்வி கேட்ட தொண்டரை வாயில் அடித்த அதிமுக MLA!!

Posted by - April 1, 2019

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஆங்காங்கே பல கட்சிகள் ஒவ்வொரு தொகுதியாக சென்று அனல் பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பாமக இளைஞரணித் தலைவரும், தர்மபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், தர்மபுரி தொகுதியில் போட்டியிடுகிறார். தர்மபுரி, மேச்சேரிக்கு சென்று பிரச்சாரம் செய்தார். அப்போது மேடைக்கு அருகே வந்த தங்கராஜ் என்ற அதிமுக தொண்டர், ‘ஐயா, கடந்த முறை இங்கதான் நின்னு ஜெயிச்சீங்க. அதுக்கு அப்புறம்

Read More

அவசர இரத்த தேவை !!

Posted by - April 1, 2019

பெயர் : முகமது ரஸ்பி வயது : 20 இரத்த வகை : AB Positive அளவு : 5 unit (டயாலிசிஸ்) மருத்துவமனை : பைன்ஆப்பிள் கிட்னி சென்டர், அண்ணா அறிவாலயம் எதிரில், திருச்சி. இரத்தம் வழங்கும் நபர்கள் கீழ்க்கண்ட எண்ணை அணுகி, சம்மந்தப்பட்ட மருத்துவமனையை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு எண் : 9600703989

Read More

எச்சரிக்கை பதிவு : கலாச்சார சீர்கேட்டில் சிக்கப்போகும் அதிரை ?

Posted by - April 1, 2019

திருவாரூர்- பட்டுக்கோட்டை இடையிலான அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்து கடந்த வாரம் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. இத்தடத்தில் உள்ள அதிராம்பட்டினம் ரயில் நிலையம் புதிதாக கட்டப்பட்டு அழகாக காட்சி தருகிறது. ஆனால் அதிரை ரயில் நிலையத்தை பார்வையிட இளம்பெண்களும், குமரிப்பெண்களும் கூட்டம் கூட்டமாக வருகை தருகின்றனர். ஆண்களின் துணையின்றி பெண்கள் கூட்டம் கூட்டமாக வருவது நிச்சயமாக சீரழிவையே உருவாக்கும். ஏதோ சுற்றுலா தலங்களுக்கு செல்வது போல் ரயில் நிலையத்திற்கு செல்லும் அதிரை இளம்பெண்கள், அங்கு புகைப்படம்

Read More

மாம்பழத்திற்கு பதில் ஆப்பிள் சின்னத்திற்கு வாக்கு கேட்ட அதிமுக அமைச்சர் !!

Posted by - April 1, 2019

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதியில் வேட்பாளராக பாமகவின் ஜோதிமுத்து களம் காண்கிறார். இவரை ஆதரித்து தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பிரச்சாரம் செய்தார். அப்போது பாமகவின் மாம்பழம் சின்னத்திற்கு பதில் ஆப்பிள் சின்னத்தில் வாக்களிக்கும்படி வாக்கு கேட்டார். இதனால் அங்கிருந்த கட்சிக்காரர்களும், வேட்பாளரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும்

Read More

போக்சோ சட்டம் என்றால் என்ன ? ஓர் பார்வை !

Posted by - April 1, 2019

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை வரை வழங்க வழிசெய்வது தான் போக்சோ சட்டம் எனப்படுகிறது. குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டமே போக்சோ சட்டம் ஆகும். குழந்தைகளுக்கு எதிராக செயல்களில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் மற்றும் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் 2012 ஆம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதான வழக்கை 3 மாதங்களுக்குள் முடித்து தண்டனை

Read More

முகமது அக்லாக் கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு யோகி கூட்டத்தில் முதல் வரிசை : ‘பாரத் மாதா கி ஜே’ கோஷம்!

Posted by - April 1, 2019

உ.பி. மாநிலம் தாத்ரியில் உள்ள பிஷாரா கிராமத்தில் பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் உரையாற்றிய தேர்தல் கூட்டத்தில் பசுக்குண்டர்களால் முகமது இக்லக் என்ற முஸ்லிம் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் முதல்நிலை குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட விஷால் சிங், மற்றும் 16 பேர் முதல் வரிசையில் அமர்ந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகேஷ்சர்மா என்ற வேட்பாளருக்காக யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் மேற்கொண்டார். இவர் கவுதம்புத் நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராவார். 2015-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி நாட்டை உலுக்கிய அந்த

Read More

பொள்ளாச்சி சம்பவத்தின் பின்னணியில் யார் ? ஆதாரத்துடன் வெளியிடுவேன் – தினகரன்

Posted by - April 1, 2019

பொள்ளாச்சி சம்பவத்தின் பின்னணியில் யார்? என்பதை, மே 23 ஆம் தேதிக்கு பின் ஆதாரங்களுடன் வெளியிட உள்ளதாக தினகரன் தெரிவித்துள்ளார். திருச்செங்கோட்டில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் சாமிநாதனை ஆதரித்து தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய தினகரன், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பத்தின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பதை, மே 23 ஆம் தேதிக்கு பின் ஆதாரங்களுடன் வெளியிட உள்ளதாக கூறினார்.

Read More

கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரை TUJ சங்க தலைவர் தோழர் டி.எஸ்.ஆர் சுபாஷ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்!!

Posted by - April 1, 2019

கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடையில் 6 நாட்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 7 வயது பெண் குழந்தையின் பெற்றோரை கோவைக்கு வருகை தந்த தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் கூறியதாவது:- இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென்றும் குழந்தைகளை பெற்றோர்கள் மிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். மேலும் இந்த சம்பவத்தை கேள்விப்பட்டது முதல்

Read More

புதுச்சேரி தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் கமல்ஹாசன்!!

Posted by - April 1, 2019

மக்களவை தேர்தலையொட்டி புதுச்சேரி தொகுதிக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் தனி தேர்தல் அறிக்கையை கமல்ஹாசன் வெளியிட்டார். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அள்ளி வீசியது அல்ல, வடிகட்டி தயாரிக்கப்பட்டுள்ளது எங்கள் தேர்தல் அறிக்கை எனவும் தெரிவித்துள்ளார்.

Read More

ஒரத்தநாட்டில் முதல்வர் பழனிசாமி பிரசார வேன் மீது செருப்பு வீசப்பட்டது!!

Posted by - April 1, 2019

தஞ்சாவூர் லோக்சபா தொகுதி த.மா.கா., வேட்பாளர் நடராஜனுக்கு ஓட்டு கேட்டு முதல்வர் பழனிசாமி ஒரத்தநாட்டில் நேற்று இரவு 9:00 மணிக்கு பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசார வேனுக்கு பின்புறம் இருந்து மர்ம நபர் செருப்பை வீசினார். செருப்பு வேனின் பின் பகுதியில் விழுந்தது. பிரசாரம் முடியும் வரை செருப்பை யாரும் எடுத்து கீழே போடவில்லை. செருப்பு வீசியது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)