அதிரையில் பரபரப்பு : கிறிஸ்தவ ஆலயத்தை அடித்து உடைத்த விஷமிகள் !

Posted by - April 30, 2019

அதிராம்பட்டினம் காவல் நிலையம் அருகே அமைந்துள்ளது புனித பாத்திமா அன்னை ஆலயம். இங்கு கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஆலயத்தின் கண்ணாடிகள் அனைத்தும் சில விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிரை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் ஆலயத்திற்குள் புகுந்த விஷமிகள், ஆலயத்தில் இருந்த சிலைகளை அடித்து உடைத்துள்ளனர். இது அதிரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒற்றுமையாக வாழும் ஊரில் கலவரத்தை உருவாக்கி, அதில்

Read More

அதிரையில் பணம் கண்டெடுப்பு!!

Posted by - April 30, 2019

அதிரை ஜாவியா ரோட்டில் உள்ள ஹோண்டா ஷோரூம் அருகே இன்று செவ்வாய்க்கிழமை பகல் ரூ. 1500 கண்டெடுக்கப்பட்டுள்ளது. உரியவர்கள் தகுந்த அடையாளத்தை சொல்லி பெற்றுக்கொள்ளவும். தொடர்புக்கு : 8248725778, +91 90033 71979

Read More

பட்டுக்கோட்டையில் இலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி !!(படங்கள்)

Posted by - April 30, 2019

இலங்கையில் கடந்த வாரம் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 300க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். இதனையடுத்து இலங்கை முழுவதும் பாதுகாப்புப்படை வீரர்கள் குவிக்கப்பட்டு, கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், பலியான அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இன்று செவ்வாய்க்கிழமை அமைதி பேரணி நடைபெற்றது. பட்டுக்கோட்டை பங்கு தந்தை மற்றும் அனைத்து கிறிஸ்தவ சபை குருமார்கள் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் அனைத்து கிறிஸ்தவ மக்களும் கலந்துகொண்டனர்.

Read More

அதிரை WCC கிரிக்கெட் தொடரின் ஒன்பதாம் நாள் முடிவுகள் !!

Posted by - April 30, 2019

அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் 22-ஆம் ஆண்டு மாநில  அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 22/04/2019 அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஒன்பதாம் நாள் ஆட்டமாக இன்று ஒரு ஆட்டம் நடைபெற்றது.   இதில் அதிரை WCC அணியினரும் செருவாவிடுதி அணியினரும் மோதினர். முதலில் பேட் செய்த  அதிரை WCC அணி 18.1ஓவர்களில் பத்து  விக்கெட் இழப்பிற்க்கு  136 ரன்கள் குவித்தனர். பின்னர் 137 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  செருவாவிடுதி அணியினர் 

Read More

அதிரை அருகே இறந்தவரின் கண்கள் தானம் !

Posted by - April 30, 2019

பட்டுக்கோட்டை வட்டம் தம்பிக்கோட்டை மேலக்காடு கிராமத்தை சேர்ந்த விநாயக தேவர் (88). இன்று 30.04.2019 செவ்வாய்க்கிழமை காலை வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார். அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் அவரது இரண்டு கண்கள், குடும்பத்தார்கள் சம்மதத்துடன் தானமாக பெறப்பட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின், கும்பகோணம் கண் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் பேராசிரியர் அப்துல்காதர் செயலாளர் அப்துல் ரஹ்மான், பொருளாளர் அப்துல் ஜலீல், அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்ற

Read More

அரையிறுதிக்கு முன்னேறிய ராம்நாடு அணி !

Posted by - April 29, 2019

அதிரை வெஸ்டர் ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் 22-ஆம் ஆண்டு மாநில  அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி  22/04/2019 அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் எட்டாம்   நாள் ஆட்டமாக இரு ஆட்டங்கள்   நடைபெற்றது.   இதில்  தஞ்சாவூர் SKY CC அணியினரும்   காரைக்கால் UNITED CCஅணியினரும் மோதினர். முதலில் பேட் செய்த  காரைக்கால்   அணி 19.2ஓவர்களில்   பத்து விக்கெட் இழப்பிற்க்கு  126 ரண்கள்  குவித்தனர் பின்னர் 127 எடுத்தால்

Read More

உத்தரப் பிரதேச பொதுதேர்வில் 165 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை !

Posted by - April 29, 2019

உத்தர பிரதேசத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் மிகவும் அதிர்ச்சி தரும் விஷயமாக 165 பள்ளிகளில் எந்தவொரு மாணவ-மாணவியரும் தேர்ச்சி பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதற்கு முந்தைய காலகட்டத்தில் உயர்நிலைப் பள்ளித்தேர்வில் அதிகப்படியாக காப்பி அடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் கெளசாம்பி இடத்தில் உள்ள 13 பள்ளிகளில் எந்தவொரு மாணவ மாணவியரும் தேர்ச்சி பெறவில்லை. இதேபோல், மேல்நிலைப் பள்ளித் தேர்வில் அலிகார், மற்றும் மணிபூரில் தலா 7

Read More

காரைக்குடி-திருவாரூர் ரயில் சேவையை உடனே துவங்க வேண்டும் – பட்டுக்கோட்டை வட்ட ரயில்பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை !

Posted by - April 29, 2019

பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் சங்க உறுப்பினர்கள் கூட்டம், பட்டுக்கோட்டை நிலா ஸ்கூலில் கடந்த 27.04.2019 சனிக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் என். ஜெயராமன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கே. லட்சுமிகாந்தன் முன்னிலை வகித்தார். பொருளாளர் பி. சுந்தரராஜூலு வரவேற்றார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன : பாராளுமன்ற தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து இப்பகுதி இரயில் சம்பந்தமான கோரிக்கைகளை வைக்க முடிவு செய்யப்பட்டது. காரைக்குடி – திருவாரூர் அகல

Read More

விதிகளை மீறி பேசும் மோடி, அமித் ஷா… நடவடிக்கை கோரி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு…!

Posted by - April 29, 2019

தேர்தல் பிரச்சாரங்களின் போது விதிகளை மீறி பேசி வரும் பிரதமர் மற்றும் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்து, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்ற்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான சுஷ்மிதா தேவ், உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகிய இருவரும் பிரச்சார கூட்டங்களில் பேசி வருவதாக

Read More

70 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என சூளுரைத்த அமைச்சர்…ஆனால் மொத்த வாக்குகளே 2.27 லட்சம் தானாம் !

Posted by - April 29, 2019

இன்னும் சில தினங்களில் 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க போகிறது. இதில் அதிமுக சார்பில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மோகன் போட்டியிடுகிறார். இதையொட்டி அங்கு அதிமுக சார்பில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. பின்னர் ஒட்டப்பிடாரம் வெற்றி குறித்து ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் சொன்னதாவது : இந்த தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை.. புரட்சி தலைவரின் வெற்றிக் கோட்டை.. அம்மாவின் இரும்பு கோட்டை… எடப்பாடியின் எஃகு கோட்டை..” என்று டைமிங்காக பேசியவர் திடீரென

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)