அதிரை: திமுக தேர்தல் அறிக்கையில் இஸ்லாமிய நலன் குறித்த கேள்விக்கு பதில் இல்லை !

Posted by - March 27, 2019

தஞ்சை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் SS.பழனி மாணிக்கம் இன்று அதிராம்பட்டினம் விஜயம் செய்தார். முன்னதாக தமாகா நிர்வாகிகளை சந்தித்து ஆதரவளித்தமைக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு MMS வாடிக்கு சென்ற அவர் தமாகா நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார். அதன் பின்னர் மமக,தமுமுக அலுவலகம் வந்த அவரை மாவட்ட, மாநில நிர்வாகிகள் வரவேற்றனர். அப்பொழுது அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் எழுப்பிய கேள்வியான,திமுக தேர்தல் அறிக்கையில் இஸ்லாமியர் நலன் இல்லாதவை குறித்தும், இஸ்லாமிய வேட்பாளர்கள் நிறுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு பலமாக உள்ள

Read More

தஞ்சை பாராளுமன்ற வேட்பாளருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு!!

Posted by - March 27, 2019

தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் S.S.பழனிமாணிக்கம் அவர்களை மாநில வர்த்தக அணி செயளாலர் யூசுப் ராஜா அவர்கள் தலைமையில் இன்று (27/03/2019) புதன்கிழமை காலை 8 மணிக்கு சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இந்நிகழ்வில் கொள்கை விளக்க அணி பேச்சாளர் அப்துல் காதர், தஞ்சை மாநகர் மாவட்ட செயளாலர் வல்லம் அஹமது கபீர், தஞ்சை தெற்கு மாவட்ட செயளாலர் பேராவூரணி அப்துல் சலாம், தெற்கு மாவட்ட து.செயளாலர் சாகுல் ஹமீது, தஞ்சை

Read More

அதிரை தமாகவினர் காங்கிரஸுக்கு துண்டு போட்டுள்ளனரா… காக்கையார் ?

Posted by - March 27, 2019

க்கா…க்கா…. என்ன காக்கையாரே…அடிக்கடி அரசியல் செய்திய சொல்லி வந்த நீ ரொம்ப நாளா ஆளையே காணோம்? ஆஸ்திரேலியா, அமேரிக்க எங்கேயும் புறபட்டுடியா? இல்லங்க… கஜாவுக்கு அப்புறம் நான் பக்கதூருக்கு போயுட்டேன்… அது சரி இப்போ என்னா செய்தியோட வந்து இருக்கீறிரு?…. என்னப்பா…எங்கிட்டு போனாலும் அரசியலேயே பேசி தொலையிறாங்க… நாங்க அது பன்னுவோம் நாங்க இது பன்னுவோம்ன்னு தேர்தல் அறிக்கையில புருடாவா உட்டு தள்ளுறானுங்க…. ம்ம்ம்….பொறந்த ஊராச்சே…ஒரு ரவுண்டு அடிக்கலாம்ன்னு நேத்து வந்தேன்… இருக்குற ஒன்னு ரெண்டு, தென்னை

Read More

அதிரை மஜகவினர் திமுக நிர்வாகிகளுடன் சந்திப்பு!!

Posted by - March 27, 2019

மனிதநேய ஜனநாயக கட்சி அதிரை நகர நிர்வாகிகள், நகர திமுக நிர்வாகிகளுடன் இன்று 27/03/2019 புதன்கிழமை மாவட்ட செயளாலர் பேராவூரணி அப்துல் சலாம் அவர்கள் தலைமையில் சந்தித்து, மதசார்பற்ற கூட்டணியில் போட்டியிடும் தஞ்சை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் S.S.பழனிமாணிக்கம் அவர்களின் வெற்றிக்கு மஜகவின் ஆதரவினை தெரிவித்தனர். இந்நிகழ்வில் மாவட்ட து.செயளாலர் அதிரை சாகுல் ஹமீது, அதிரை நகர செயளாலர் அப்துல் சமது, நகர பொருளாலர் ராஜிக், நகர து.செயளாலர் முகமது கான் மற்றும் மனிதநேய சொந்தங்கள் கலந்து

Read More

கோவையில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டே கொல்லப்பட்டார் – பிரேத பரிசோதனையில் உறுதி !

Posted by - March 27, 2019

கோவையில் 5 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், வெளியான பிரேதப் பரிசோதனை அறிக்கையில், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். திங்கள்கிழமை காலை வழக்கம் போல பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய அந்த மாணவி, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென காணாமல் போனதால், அனைவரும் தேடியுள்ளனர். ஆனால் சிறுமி

Read More

மரண அறிவிப்பு ~ பாத்திமா அவர்கள் !

Posted by - March 27, 2019

மரண அறிவிப்பு : பெரியநெசவு தெருவை சேர்ந்த சமதப்பா அவர்களின் மகளும், மர்ஹும் முஹம்மது சரீஃப் அவர்களின் மனைவியும், சாவண்ணா, ஹபீப் ரஹ்மான், ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் தாயாரும், சாகுல் ஹமீது, சத்தார் ஜபருல்லா(ஆப்பகுத்தி) ஆகியோரின் மாமியாரும், உபயத்துல்லா(அதிரை உபயா), சாதுல்லா, காதர், ரவூப், சமது, புஹாரி, சரீஃப் ஆகியோரின் வாப்புச்சியும், சிராஜ்தீன், ரபீக், இர்ஃபான், இத்ரீஸ் ஆகியோரின் உம்மம்மாவுமாகிய செய்கு பாத்திமா (சேவாத்துமா) அவர்கள் சுரைக்காகொல்லை இல்லத்தில் இன்று (27/03/19) அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி

Read More

தமிழகத்தில் ஏப்.1ம் தேதி முதல் அமல்! 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது!!

Posted by - March 27, 2019

தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் 490 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில் 44 சுங்கச் சாவடிகள் (டோல்கேட்) உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து ஆண்டிற்கு ஒருமுறை 10 சதவீதம் முதல் 15 சதவீதம் கூடுதலாக கட்டணம் உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 20 சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி, ஏப்ரல்

Read More

கோவையில் சிறுமி வன்கொடுமை : நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!!

Posted by - March 27, 2019

கோவையில் நேற்று 6 வயது சிறுமி உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. இதையடுத்து போக்சா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து 10 குழுக்கள் அமைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளதால் சம்பந்தப்பட்டவரை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More

அதிரையில் தொடரும் திருட்டு ! காவல்துறை அலட்சியத்தால் கதிகலங்கும் பொதுமக்கள் !!

Posted by - March 27, 2019

அதிராம்பட்டினம் கடைத்தெரு கிரானி மளிகை எதிரே உள்ள நெய்னா டீக்கடை உரிமையாளர் ஷேக்தாவுது, வழக்கமாக நேற்று இரவு பணிமுடிந்து கடையை பூட்டி சென்றுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை கடையை திறக்க வந்த ஷேக்தாவூது கடையின் பூட்டு உடைக்கப் பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ஒரு டிவி,சிலிண்டர்,₹5700 ரொக்க பணம் ஆகியவை திருடு போன சம்பவம் தெரியவந்தது. இதுகுறித்து காவல் துறைக்கு பாதிக்கப்பட்ட கடையின் உர்மையாளர் தகவல் தெரிவித்துள்ளார். விரைவில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)