பட்டுக்கோட்டை சாலையில் விபத்து… அதிரை பெண்கள் இருவர் படுகாயம் !

Posted by - March 22, 2019

அதிராம்பட்டினம் வள்ளியம்மை நகரைச் சேர்ந்தவர்கள் சாரதா(45) மற்றும் கலா ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை காலை அதிரையிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது பள்ளிக்கொண்டான் அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் திடீரென விபத்துக்குள்ளானது. இதில் கலா என்பருக்கு கால் முறிவு ஏற்பட்டு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Read More

தஞ்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கு அவசர இரத்த தேவை!!

Posted by - March 22, 2019

CRESCENT BLOOD DONORS THANJAVUR DISTRICT இரத்த தேவை அவசரம் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் ரியாஸ் என்ற நபருக்கு AB-ve இரத்த வகை மூன்று யூனிட் அவசரமாக தேவைப்படுகிறது. எவரேனும் உங்கள் நட்பு வட்டங்களில் இருந்தாலோ அல்லது தாங்கள் இரத்த தானம் செய்ய விரும்பினாலோ எங்களை தொடர்புகொள்ளலாம். பதிவு நாள்:-23/03/2019 நேரம்:- காலை 9.00Am தொடர்புக்கு:-AFRITH:8220616633 SAMEER:9791418704

Read More

ஏழை இஸ்லாமியர்களுக்கு மருத்துவ கல்லூரி… அமமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி !

Posted by - March 22, 2019

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான அமமுகவின் தேர்தல் அறிக்கையை  அமமுக வின்  துணை பொதுச்செயலர் டி.டி.வி.தினகரன் அசோக் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள் : 1. விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை. 2. டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். 3. நிஷிஜி கவுன்சில் நிர்வாகத்தில் உரிய மாற்றங்கள் செய்யப்படும். 4. அனைத்து விவசாயக்

Read More

அதிரை அருகே மணல் லாரி கவிழ்ந்து விபத்து !!

Posted by - March 22, 2019

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த ராஜாமடம் ஆற்றில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருட்டு மணல் ஏற்றிவிட்டு ஈசிஆர் சாலையில் வந்துகொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி, ஈசிஆர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. நடுரோட்டில் லாரி கவிழ்ந்ததால், லாரியிலிருந்த திருட்டு மணல் சாலையில் கொட்டியது. இதனால் ஈசிஆர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராஜாமடம் ஆற்றில் அதிகளவில் மணல் கொள்ளை

Read More

அமமுக-வின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு… தேனியில் களமிறங்குகிறார் தங்க. தமிழ்ச்செல்வன் !

Posted by - March 22, 2019

நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (வெள்ளிக்கிழமை) அமமுக வெளியிட்டது. அதன்விவரம் : வடசென்னை – பி.சந்தானகிருஷ்ணன் அரக்கோணம் – என்.ஜி.பார்த்திபன் வேலூர் – கே.பாண்டுரங்கன் கிருஷ்ணகிரி – ச. கணேசகுமார் தருமபுரி – பி.பழனியப்பன் திருவண்ணாமலை – ஞானசேகர் ஆரணி – ஜி.செந்தமிழன் கள்ளக்குறிச்சி – கோமுகி மணியன் திண்டுக்கல் – பி.ஜோதிமுருகன் கடலூர் – கே.ஆர். கார்த்திக் தேனி – தங்க. தமிழ்ச்செல்வன் விருதுநகர் – பரமசிவ ஐயப்பன் தூத்துக்குடி –

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)