மக்களவை தேர்தல் – வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக !

Posted by - March 17, 2019

லோக்சபா தேர்தலுக்கு 33 நாட்களே உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் அனைத்தும் படு பிஸியாக இருக்கின்றன. இந்த நிலையில் அதிமுக- பாமக- பாஜக- தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும், புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமமுக, திமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர் பட்டியலை

Read More

எஸ்டிபிஐ கட்சியின் மத்திய சென்னை வேட்பாளராக தெஹ்லான் பாகவி அறிவிப்பு !

Posted by - March 17, 2019

தமிழகத்தில் அடுத்த மாதம் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பில் கட்சிகள் மும்முரமாக உள்ளன. அந்த வகையில், அமமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னை தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த கட்சியின் வேட்பாளராக அக்கட்சியின் தேசிய துணைத்தலைவர் கேகேஎஸ்எம். தெஹ்லான் பாகவி அறிவிக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள 39 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு பாடுபடுவது என அக்கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் முன்னாள் மத்திய

Read More

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்…!

Posted by - March 17, 2019

முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரும், கோவா மாநில முதல்வருமான மனோகர் பாரிக்கர் இன்று காலமானார். அவருக்கு வயது 63. கோவா முதல்வராக பதவி வகித்து வந்தவர் மனோகர் பாரிக்கர். கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு கோவா தலைநகர் பனாஜியில் அவருடைய உயிர் பிரிந்தது. மனோகர் பாரிக்கரின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள்

Read More

மக்களவை தேர்தல் 2019 – வெளியானது திமுக வேட்பாளர் பட்டியல் !!

Posted by - March 17, 2019

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் பம்பரமாய் சுழன்று வருகின்றனர். கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் தேர்வு என தமிழக அரசியல் களமே பரபரத்து காணப்படுகிறது. அமமுக இன்று தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அதிரடி காட்டியது. இந்நிலையில் இன்று மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை

Read More

பெரம்பலூர் தொகுதியில் களமிரங்குகிறார் பாரிவேந்தர்… உதயசூரியன் சின்னத்தில் போட்டி !

Posted by - March 17, 2019

லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் எந்த கட்சிகள் எங்கு போட்டியிடும் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. மொத்தம் 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதற்கான தொகுதிகள் அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள 20 தொகுதிகளில் மற்ற கூட்டணி கட்சிகள் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. இந்திய ஜனநாயக கட்சி திமுக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணி சார்பாக பெரம்பலூர் தொகுதியில் ஐ.ஜே.க சார்பில் அதன் நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிட

Read More

வெளியானது அமமுக வேட்பாளர் பட்டியல் !!

Posted by - March 17, 2019

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவுள்ளது. இதற்கிடையில் தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை வெளியிட்டுள்ளார். மேலும்  சட்ட மன்ற இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 24 நாடாளுமன்ற தொகுதிகளில்

Read More

அதிமுக கூட்டணியில் எந்த கட்சி எங்கே போட்டியிடுகிறது… வெளியானது அறிவிப்பு !

Posted by - March 17, 2019

அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டார். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக, புதிய நீதி கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், என். ஆர். காங்கிரஸ் , புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த நிலையில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்துள்ளார் ஓபிஎஸ். அதன்படி, அதிமுக : சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திருப்பூர், பொள்ளாச்சி, ஆரணி, திருவண்ணாமலை, சிதம்பரம், பெரம்பலூர், தேனி, மதுரை,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)