அதிரை அமமுக அம்மாபேரவை ஆலோசனை கூட்டம் !

Posted by - March 12, 2019

அதிராம்பட்டினம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அம்மா பேரவை சார்பாக 12/03/2019 இன்று காலை அதிரை அம்மா பேரவை தலைவர் ரா.மகேந்திரன் தலைமையில் அலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் செய்யும் முறை,மற்றும் வியூகம் பற்றி நகர அம்மா பேரவைச்செயலாளர் சு.முகம்மது அவர்கள் உரையாற்றினார். இக்கூட்டத்தில் நகர துணைத் தலைவர் நஷீர் அகமது, நகர இணைச்செயலாளர்கள் இஸ்மாயில், லோகநாதன், பாலா திருநாவுக்கரசு, துணைச் செயலாளர்கள் பாலமுருகன், முகமது அலி, ராஜேஷ், பொருளாளர் ராஜா

Read More

பட்டுக்கோட்டை மனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் !(படங்கள்)

Posted by - March 12, 2019

பட்டுக்கோட்டையில் உள்ள மனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ரத்ததான முகாம் மற்றும் ரத்த வகை கண்டறியும் முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு மனோரா பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் சரவணன் நாடிமுத்து தலைமை தாங்கினார். பட்டுக்கோட்டை பாலகிருஷ்ணா மருத்துவமனையிலிருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வருகை புரிந்தனர். முகாமில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். மேலும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களின் ரத்த வகையை கண்டறிந்தனர். முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாட்டு நலபணித்திட்ட அலுவலர் அருண் செய்திருந்தார்.

Read More

பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?

Posted by - March 12, 2019

 ”டேய் ரிஷ்வந்த் .. விட்ருடா வீட்டுக்குப் போயிடறேன்”, “டேய் பிரெண்டுன்னு சொன்னத நம்பி தானேடா வந்தேன்… ஏண்டா என்ன இப்படி பண்ணினே” “அண்ணா அடிக்காதீங்கண்ணா.. வலிக்குது.. நானே கழட்டிடறேண்ணா” – மங்கலாக்கப்பட்ட அந்தக்  காணொலியில் முகமும் அடையாளங்களும் மறைக்கப்பட்ட அந்தப் பெண்ணின் கதறல்கள் இதயத்தை கூரிய கத்தியால் பிளந்து போடுகின்றன. நக்கீரன் பத்திரிகை வெளியிட்ட அந்தக் காணொளியைக் கண்ட அந்தக் கணத்தில் சுயநினைவே  மறந்தது; கல்வி மறந்து போனது; பார்க்கும் நான் ஒரு ஆண் என்பதும் மறந்து

Read More

அடுத்த இரண்டு மாதங்களுக்கு பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்காது ?

Posted by - March 12, 2019

பெட்ரோல் விலையைக் குறைக்க சவுதியிடம் உதவி கோரப்பட்டுள்ளதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரிப்பால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் மார்ச் 10-ம் தேதி சவுதி பெட்ரோலியத்துறை அமைச்சர் காலித் அல் ஃபாலியை இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து இந்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ட்விட்டர்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)