கோடைக்காலங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை ~ அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை !

Posted by - March 10, 2019

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. அதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது : மாணவர்கள் குறைவாக உள்ள அரசுப்பள்ளிகளை மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என கூறினார். இது வேண்டுமென்றே, திட்டமிட்டு பரப்பப்படுவதாக தெரிவித்தார். மேலும் கோடை விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது, அப்படி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று

Read More

தமிழகத்தில் ஏப்ரல் 18 ல் தேர்தல் : இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

Posted by - March 10, 2019

17 வது மக்களவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணைய அதிகாரி சுனில் அரோரா இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் தேதியை அறிவித்தார். அதன் படி 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11 ம் தேதியும், 2 ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ம் தேதியும் 3 ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23 ம் தேதியும், 4 கட்ட தேர்தல் ஏப்ரல் 29

Read More

மல்லிப்பட்டிணம் மீனவ சங்கத்தினர் முதல்வர்,துணை முதல்வருடன் சந்திப்பு…!

Posted by - March 10, 2019

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் விசைபடகு மீனவர் சங்க நிர்வாகிகள் முதல்வர்,துணை முதல்வருடன் சந்திப்பு. கஜா புயலால் கடலோர பகுதியான மல்லிப்பட்டிணம் சிதைந்து சின்னாபின்னமாய் போனது.இதில் வாழ்வாதாரமான விசைப்படகுகள்,நாட்டுப்படகுகள் சுக்கு நூறாய் போனது.இவற்றிற்கு அரசு குறிப்பிட்ட நிவாரண தொகை அறிவித்திருந்தது. அரசு அறிவித்த நிவாரணம் தங்களுக்கு போதாது என்று விசைப்படகு மீனவர் சங்கத்தினர் தொடர்ந்து கூறிவந்தனர்.இந்நிலையில் நிவாரணத்தை உயர்த்தக் கோரி பல கட்டங்களாக ஒவ்வொரு அதிகாரியையும் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக சென்னையில் முகாமிட்டு மல்லிப்பட்டிணம் மீனவ

Read More

அதிரை அம்மன் மண்டப கும்பாபிஷேக விழா : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!!

Posted by - March 10, 2019

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் கரையூர் தெரு அருள்மிகு சந்தன மாரியம்மன் ஆலயத்திற்கு எதிரே உள்ள அம்மன் மண்டப கும்பாபிஷேகம் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Read More

மேடு பள்ளமான சாலை : விபத்து ஏற்படும் அபாயம்..!! கவனிக்குமா நெடுச்சாலைத்துறை..??

Posted by - March 10, 2019

அதிராம்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் மேடு பள்ளம் விபத்து ஏற்பட வாய்ப்பு. தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ~ பட்டுக்கோட்டைக்கு செல்லும் சாலையில் மேடு பள்ளம் ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அதிரை ~ பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை எதிரில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் மேற்பகுதியில் சரியாக தார் சாலை போடப்படவில்லை. அவ்வழியாக பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், பள்ளி பேருந்துகள் பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். இதனால் சாலையில் உள்ள பள்ளத்தினால் விபத்துகள் ஏற்படும் ஆபயம் உள்ளது.மேலும்

Read More

அதிரையில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் !

Posted by - March 10, 2019

தமிழகம் முழுவதும் இன்று(10.03.2019) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் இன்று காலை முதல் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதிரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், சங்கங்கள், அங்கன்வாடி நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. இன்று மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும். 5

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)