கள்ளக்குறிச்சி தனி மாவட்ட அறிவிப்பு…முதல்வருக்கு நன்றி தெரிவித்து INTJ அறிக்கை வெளியீடு !

Posted by - January 8, 2019

கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று(08/01/2019) சட்டப்பேரவையில் அறிவித்தார். தமிழகத்தின் 33வது மாவட்டம் என்ற பெருமையை கள்ளக்குறிச்சி பெற்றுள்ளது. முதல்வரின் இந்த அறிவிப்பை வரவேற்கும் விதமாக INTJ சார்பில் அதன் தலைமை நிலைய செயலாளர் எஸ்.எம்.சையது இக்பால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது : விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த குறிப்பாக சின்னசேலம், திருக்கோவிலூர், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு இன்றைய தினம் முதலமைச்சர் செயல்வடிவம் கொடுத்திருக்கிறார். மரக்காணம் தொடங்கி கல்வராயன்

Read More

அதிரை கிங் ஷாப்பிங் மாலில் பேரூராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை..!!

Posted by - January 8, 2019

கடந்த ஜனவரி 1ஆம் தேதி 2019 முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யவும், உபயோகிக்கவும் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டது. அரசின் உத்தரவை மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அச்சுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று(08/01/2018) செவ்வாய்க்கிழமை மாலை 5மணியளவில் அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் சிலர் பிளாஸ்டிக் பயன்படுத்துவதாக வந்த தகவலின் அடிப்படையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, அதிராம்பட்டினம்

Read More

அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் !(படங்கள்)

Posted by - January 8, 2019

அதிராம்பட்டினம் பைத்துல்மால் அமைப்பின் டிசம்பர் மாத மாதாந்திரக் ஆலோசனைக் கூட்டம் கடந்த 06.01.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு பைத்துல்மால் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிராம்பட்டினம் பைத்துல்மால் அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Read More

தனி மாவட்டம் ஆனது கள்ளக்குறிச்சி !

Posted by - January 8, 2019

தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிச்சாமி, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் ஒன்று உருவாக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பதிலுரை ஆற்றினார். அப்போது சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ குமரகுரு ஆகியோரின் கோரிக்கையை ஏற்று விழுப்புரம் பெரிய மாவட்டமாக இருப்பதால் கள்ளக்குறிச்சி தனிமாவட்டமாக உருவாக்கப்பட இருப்பதாக

Read More

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த ஆமினா அம்மாள் அவர்கள் !

Posted by - January 8, 2019

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் தீன் முகம்மது அவர்களின் மகளும், ஜமால் முகமது அவர்களின் சகோதரரும், மர்ஹூம் நூ.ரா. அப்துல் கனி அவர்களின் மனைவியும், முகம்மது ராவுத்தர், ஜெகபர் சாதிக், சேக் தாவூது ஆகியோரின் தாயாரும், அமானுல்லா, குலாம் ரசூல் ஆகியோரின் சிறிய தாயாரும், சேக் அலாவுதீன், முகமது ரியாஸ், முகமது இக்பால் ஆகியோரின் பெரிய தாயாரும், அப்துல்லாஹ், ஹாஜா இஸ்மாயில், அஸ்வர்தீன், அப்துல் கஃப்பார், யாசர் ஆகியோரின் பாட்டியாரும், ஹிதாயத்துல்லாஹ், ஹாஜா மைதீன்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)