அதிரையில் AGRA-வின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு !

Posted by - December 8, 2018

அதிரையில் கடந்த மாதம் 15ஆம் தேதி நள்ளிரவில் கஜா புயல் வீசியது. இதனால் பல்லாயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. அதிரை மக்கள் பலர் தங்கள் வீடுகளை பறிகொடுத்தனர். புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அதிரையை மறுசீரமைப்பு செய்யவும், வீடுகளை இழந்த மக்களுக்கு வீடு கட்டிகொடுக்கும் நோக்கிலும் அதிரை கஜா புயல் மறுசீரமைப்பு கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் பத்திரிகையாளர் சந்திப்பு அதிரை பைத்துல்மால் வளாகத்தில்

Read More

அதிரையில் பரவி வரும் டெங்கு…சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு !

Posted by - December 8, 2018

கஜா புயலால் உருக்குலைந்த அதிரையில் டெங்கு, மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவதாக புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. இவ்விவகாரம் குறித்து நமது அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் தஞ்சை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை அதிராம்பட்டினத்தில் தஞ்சை மாவட்ட சுகாதாரத்துறை ஆய்வாளர், டிடிஹெச், ஹெல்த் இன்ஸ்பெக்டர், தாமரங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ஆகியோர் இணைந்து காய்ச்சல் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அதிராமபட்டினம் பேரூராட்சி துப்புறவு

Read More

Posted by - December 8, 2018

ஜா புயலால் தஞ்சை மாவட்டத்தின் கடலோர பகுதிகள் உருக்குலைந்து போய் உள்ளன. பலர் வீடுகளை இழந்தும், இருக்க இடமின்றியும் தவித்து வருகின்றனர். மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்துவிட்டனர். புயலால் மீனவர்களின் படகுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. இந்நிலையில் தஞ்சை மாவட்ட மீனவர்கள் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தனர். தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், ராமர் கோயில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை

Read More

இருண்ட வீட்டுக்கு மின்சார கட்டணமா? SDPI கட்சி மல்லிப்பட்டிணம் நகரத்தலைவர் கடும் கண்டணம்…!

Posted by - December 8, 2018

வீடு,வாழ்வாதரம்,உடைமை யாவற்றையும் இழந்து பரிதவித்து நிவாரணம் கிடைத்திடாத என்று ஏங்கி நிற்கும் அப்பாவி பொது மக்களிடம், கஜா புயல் தாக்கத்தால் கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக மின்சாரம் இன்றி இருளில் மூழ்கி இருக்கும் மல்லிப்பட்டிணம் மக்களிடத்தில் சென்ற மாதம் கட்டிய அதே மின்கட்டணத்தை திரும்ப செலுத்துங்கள் என்ற மின்வாரியத்தின் உத்தரவு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போன்றதாகும். கஜா புயலின் கோரதாண்டவத்தால் வாழ வழியின்றி இருக்கும் மக்களிடத்தில் மின்சார கட்டணம் கட்ட சொல்வது, உடனே செத்துவிடுங்கள் என்பதை

Read More

காய்ச்சலா? அழையுங்கள் 104 !!

Posted by - December 8, 2018

அரசின் சுகாதாரத்துறை சார்பில் கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணான 104ஐ அறிமுகம் செய்துள்ளன. இதில் காய்ச்சல்,டெங்கு, மலேரியா, மன நலம் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்க வழிவகை செய்ய ஆலோசனைகள் வழங்கப்படும். தற்போது அதிரையில் டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 5நபர்கள் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் இவ்வேளையில் இது குறித்த தகவலை நமது அதிரை எக்ஸ்பிரஸ் தளம் மாநில சுகாதாரத்துறை கவனத்திற்கு எடுத்து சென்றன. அதன் பேரில் போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள இன்று (08/12/18) காலை முதல்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)