அதிரையரின் பர்ஸ் காணவில்லை..!!

Posted by - November 24, 2018

தஞ்சை மாவட்டம்;அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த K.S.M. சாதிக் பாட்சா அவர்களின் பர்ஸ் இன்று(24/11/2018) அதிரை பேருந்து நிலையம் அருகில் தவரவிட்டதாக கூறியுள்ளார். அதில் பான் அட்டை, ஆதார் அட்டை, வங்கி ஏடிஎம் அட்டை, இந்திய ஓட்டுனர் உரிமம் மற்றும் வெளிநாட்டு ஓட்டுனர் உரிமம். போன்ற முக்கிய ஆவணங்கள் இருப்பதால். யாரேனும் பர்ஸினை கண்டெடுத்தால் சாதிக் பாட்சா அவர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். தொடர்புக்கு:- +91-7395 889 646, +91-6374 851 866, +91-6374 952 288.

Read More

அதிரையர்களுக்கு ஓர் அவசர எச்சரிக்கை !

Posted by - November 24, 2018

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிரையில் வீசிய கஜா புயலை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் மின்தடை ஏற்பட்டன. புயலால் சேதமடைந்த மின் கம்பங்கள், மின் ஒயர்கள் ஓரளவுக்கு சரி செய்து அவசர கதியில் இன்றோ அல்லது நாளை காலையோ மின் வினியோகம் செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன? கஜா புயலின் வேகத்தால் நமது வீடுகளில் உள்ள மின் சாதன பொருட்கள் நல்ல முறையில் உள்ளதா என கண்காணிக்க வேண்டும். வெளிவாசலுக்கும்,பின்புறத்திற்க்கு

Read More

அதிரைக்கு இன்னும் 36 மணி நேரத்தில் மின்சாரம் ? மின்வாரிய அதிகாரி தகவல் !

Posted by - November 24, 2018

கடந்த 16ஆம் தேதி அதிகாலை அதிரை உள்ளிட்ட பகுதிகளில் வீசிய கஜா புயலால் தென்னை மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் வெகுவாக சாய்ந்தன இதனால் அன்று முதல் அதிரை உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் முற்றிலும் தடைப்பட்டன. இதனை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்த மின்வாரிய ஊழியர்கள், இரவுபகல் பாராது பணிகளை செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட 60℅ பணிகள் முடிவடைந்த நிலையில் நாளை இரவோ அல்லது மறுநாள் காலையிலோ மின் இணைப்பு கிடைத்துவிடும் என்றும், இருப்பினும்

Read More

எங்களின் நலனை விட அவர்களின் நலனே மேல்!! நெகிழ வைத்த CBD!!

Posted by - November 23, 2018

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையமாக உருவான கஜா புயல் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு அதிரையை மணிக்கு 111கிமி வேகத்தில் தாக்கியது. இதில் அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் மரம், செடி கொடிகள் வேரோடு சாய்ந்து அதிரை உருக்குலைந்து காட்சி அளிக்கிறது. இன்னும் குடிநீர், மின்சாரம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் ஏதும் அரசின் தரப்பிலிருந்து சரிவர கிடைக்காததால் தன்னார்வலர்கள் மற்றும் குறிப்பிட்ட அரசியல் கட்சியை சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே

Read More

கஜா புயலை வீழ்த்தி 12 உயிர்களை காப்பாற்றிய அதிரையின் நிஜ ஹீரோக்கள் : நெகிழ வைத்த ஓர் சம்பவம்!!

Posted by - November 22, 2018

வங்கக் கடலில் மையம் கொண்ட கஜா புயலானது தமிழகத்தை குறிப்பாக டெல்டா மாவட்டங்களை சூறையாடியது. தமிழகத்தில் இந்த கஜா கோர புயலில் அதி தீவிர காற்றாக அதிரையில் மணிக்கு 111 கி.மீ வேகம் பதிவானது. இப்படிபட்ட நேரத்தில் கஜா புயல் கரையை கடக்கிறது. ரியாத்தில் இருக்கும் ரியாஸ் பதறுகிறார். தஞ்சாவூர் மாவட்டம் எரிபுறக்கரையில் உள்ள பழைய வீட்டில் தனது குடும்பம் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருப்பதே இதற்கு காரணம். உடனே தன்னார்வலரான கலீஃபாவை தொடர்புக்கொண்டு பதறுகிறார் ரியாஸ்.

Read More

அதிரையில் PFI சார்பில் நடைபெற்ற பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி..!!

Posted by - November 21, 2018

தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம், பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று (21/11/2018) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எம்.முஹம்மது இஸ்மாயில் அவர்கள் கலந்துகொண்டு பேரிடர் காலங்களில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் எப்படி விரைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்தும் உரையாற்றினார். மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் எம். முஹம்மது சேக் அன்சாரி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் நஸ்ருதீன், ஜெ.

Read More

மரண அறிவிப்பு – முகமது நைனா

Posted by - November 21, 2018

மரண அறிவிப்பு:- அதிராம்பட்டிணம், புதுமனைத்தெரு காலா வீட்டை சேர்ந்த மர்ஹும் முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகனும், முஹம்மது ரஜாக், முஹம்மது முஹைதீன் முஹம்மது யாகூப் , முஹம்மது ஜைனுல் ஆபிதீன் ஆகியோரின் சகோதரரும் முஹம்மது தாஜீதீன், முஹம்மது இஸ்ஹாக், முஹம்மது அபூபக்கர், அஹமது அஸ்ரப் ஆகியோரின் தஹப்பனாரும் SIS அபூல்ஹஸன் சாதலி, முஹம்மது ஹுசைன் ஆகியோரின் மாமாவுமாகிய முஹம்மது நைனா அவர்கள் இன்று(21/11/2018) இரவு 12.15 மணியளவில் புது ஆலடி தெரு இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள். இனாலில்லாஹி வா

Read More

அதிரையில் துப்புரவு பணி தீவிரம்

Posted by - November 21, 2018

இரவு நேரத்திலும் பேரூராட்சியின் சுத்தம் செய்யும் பணி… கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு கஜா புயல் அதிரையை மணிக்கு 111கிமி வேகத்தில் தாக்கியது. இதில் அதிரை பலத்த சேதத்தை சந்தியுள்ளது. இதனால் மரம், செடி கொடிகள் வேரோடு சாய்ந்து சின்னாபின்னமாக்கியது. இதனால் அதிரை உருக்குலைந்து காட்சி அளிக்கிறது. இன்னும் குடிநீர், மின்சாரம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் ஏதும் சரிவர கிடைக்காததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் அதிரை பேருராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிடக்கும் மரம் செடி கொடிகள் பொதுமக்களுக்கு

Read More

மரண அறிவிப்பு:-மேலத்தெருவை சேர்ந்த ASM அப்துல் ஹமீத் அவர்கள்..!!

Posted by - November 19, 2018

அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த ASM அப்துல் ஹமீத் அவர்கள் நேற்று(18/11/2018) இரவு 10 மணியளவில் மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று(19/11/2018) லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளிவாசல் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Read More

திட்டமிட்டே வஞ்சிக்கப்படும் அதிராம்பட்டினம்.

Posted by - November 18, 2018

திட்டமிட்டே வஞ்சிக்கப்படும் அதிராம்பட்டினம் கடந்த வெள்ளிக்கிழமை 16 -11-2018 அன்று கஜா புயலினால் தமிழகத்தின் பெறும்பாலான கடலோர மாவட்டங்கள் பெறும் பாதிப்புக்குள்ளாகியது. குறிப்பாக கடலோர பகுதியான அதிராம்பட்டினம் 111 கி.மீ வேகத்தின் புயலுக்கு இரையானது ஏறத்தாழ இந்த கிராமம் 90% அழிந்துவிட்டது. அரசு தரப்பிலிருந்து எந்தவொரு பேரிடர் மீட்பு குழுக்களோ அல்லது அரசு ஊழியர்களோ இதுவரை முற்றிலும் அழிந்த இக்கிராமத்தின் அழிவை ஆய்வு செய்யவோ மீட்பு பணிகளை செய்யவோ முன்வரவில்லை மாறாக திட்டமிட்டே இந்த கிராமம் இருட்டடிப்பு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)