கஜா புயல் காரணமாக அதிரை புயல் மையம் காப்பகத்தில் 100 க்கும் மேற்பட்டோர் தங்கவைப்பு..!!

Posted by - November 15, 2018

கஜா புயல் எதிரொலியை அடுத்து கடலோரத்தில் வசிக்கும் மீனவ குடும்பங்களுக்கு மற்றும் குடிசை வீட்டில் வசிக்கும் பொதுமக்களுக்கு நேற்று காலை முதல் அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்று நள்ளிரவு முதல் நாளை காலை வரை கடலூர் – பாம்பன் இடையே “கஜா” புயல் கரையை கடக்கவுள்ளது என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆதலால் பொதுமக்கள் தங்குவதற்கு அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதிரையில் அமைந்துள்ள புயல் பாதுகாப்பு

Read More

கஜா புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் பேருந்துக்கள் இயக்கவேண்டாம்..!!

Posted by - November 15, 2018

கஜா புயல் இன்று இரவு கடலூர் – பாம்பன் இடையே கரையை கடக்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை அரசு பேருந்துகள் இயக்க வேண்டாம் என்று வருவாய் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Read More

கஜா புயல் எதிரொலி : தமிழகத்தில் 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை !

Posted by - November 15, 2018

கஜா புயல் இன்னும் சற்று நேரத்தில் கடலூர் – பாம்பன் இடையே கரையை கடக்க உள்ளது. இதனால் இப்பகுதிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும், 20 செ.மீ அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் புயல் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் என கண்டறியப்படும் தஞ்சை, நாகை, ராமநாதபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள்

Read More

அதிரை மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு !

Posted by - November 15, 2018

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் இன்று இரவு 8.30 மணியளவில் கஜா புயல் தொடர்பாக கீழ்க்கண்டவாறு அறிவிப்பு செய்யப்படுகிறது. புயலின் காரணமாக காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக 1. குடிசைகள், ஆஸ்பெட்டாஸ் மற்றும் ஓட்டு வீடுகளில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக மேடான மற்றும் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வேண்டும். எனவே கிராமத்தில் உள்ள மக்கள் புயல் பாதுகாப்பு மையத்திற்கு வந்து பாதுகாப்பாக தங்கி கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. முக்கிய

Read More

விபத்தில் கால் முறிந்த பெண்ணிற்கு அதிரை TIYA சங்கத்தினர் நிதியுதவி !

Posted by - November 15, 2018

அதிரை ஷிஃபா பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் வெளியூர் சென்று வந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட எதிர்பார்க்காத விபத்தில் மனைவிக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் மருத்துவ செலவிற்கு உதவி செய்யுங்கள் என நமது அதிரை எக்ஸ்பிரஸில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் அதிரை TIYA வைச் சேர்ந்த குவைத் சகோதரர்கள் அப்பெண்ணின் மருத்துவ செலவிற்கு தங்களால் முயன்ற அளவு வசூல் செய்த ரூ.15,036ஐ பண

Read More

அதிரை பேரூராட்சியின் புயல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் !(வீடியோ)

Posted by - November 15, 2018

தமிழகத்தை மிரட்டி வரும் கஜா புயலானது இரவு நாகை-பாம்பன் இடையே கரையை கடக்க உள்ளது. இதனால் இந்த இரு இடங்களுக்கு இடைப்பட்ட ஊர்களில் புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசின் சார்பில் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அதிரை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பிலும் புயல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. பேரிடர் ஏற்பட்டால் அதற்கு தேவையான உபகரணங்களும், பேரூராட்சி பணியாளர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ்

Read More

அதிரையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு ![படங்கள்]

Posted by - November 15, 2018

தமிழகத்தை மிரட்டி வரும் கஜா புயலானது இரவு நாகை-பாம்பன் இடையே கரையை கடக்க உள்ளது. இதனால் இந்த இரு இடங்களுக்கு இடைப்பட்ட ஊர்களில் புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசின் சார்பில் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் ஒன்றான தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள அரசின் புயல் பாதுகாப்பு மையத்தை தமிழக அரசின் உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தஞ்சை மாவட்ட

Read More

மல்லிப்பட்டினத்தில் அட்டூழியத்தில் ஈடுபட்டு வரும் சமூக விரோதிகள் !

Posted by - November 15, 2018

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அரசின் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மல்லிப்பட்டினத்தை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல நூறு மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அப்பளியில் உள்ள விளக்குகளை சமூக விரோதிகள் அடித்து உடைத்துள்ளனர். பள்ளியில் உள்ள 12 விளக்குகளை உடைத்து மட்டுமின்றி, அங்குள்ள கழிப்பறைகளை சேதப்படுத்தியும், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் உள்ளனர். தற்போது பள்ளி நிர்வாகத்தினர் உடைக்கப்பட்ட விளக்குகளுக்கு பதிலாக, கடையில் வாடகைக்கு விளக்குகளை எடுத்து எரியவிட்டுள்ளனர். இந்த வாடகையினால் தேவையற்ற

Read More

மரண அறிவிப்பு : மேலத்தெரு எம். காதர் சுல்தான் அவர்கள் !

Posted by - November 15, 2018

மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது அலியார் அவர்களின் மகனும், மர்ஹூம் கை.செ.மு முகமது சாலிகு அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி டி.பகுருதீன் அவர்களின் சகலையும், மர்ஹூம் எம்.எம். முகமது மீராசாஹிப் அவர்களின் மாமனாரும், கே. இப்ராஹீம்சா, கே. சாகுல் ஹமீது, கே. ஜாஹிர் உசேன் ஆகியோரின் தகப்பனாருமாகிய எம். காதர் சுல்தான் (வயது 84) அவர்கள் இன்று காலை 8 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Read More

மல்லிப்பட்டிணம் நகர எஸ்டிபிஐ கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம்….!

Posted by - November 15, 2018

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் நகர SDPI கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று (15.11.2018) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகரத்தலைவர் அப்துல் பகத் தலைமை தாங்கினார், நகரச்செயலாளர் ஜவாஹீர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கஜா புயல் கரையை கடக்க இருப்பதால் 10 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவை அமைத்தனர். கஜா புயலை எதிர்கொள்வது,மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகள் செய்வது குறித்தும், நகரத்தின் பல பகுதிகளில் பன்றிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் நோய்கள் பரவும் அபாயம் இருக்கிறது இதனை கருத்தில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)