அதிரையர்களின் தித்திக்கும் தீபாவளி கொண்டாட்டங்கள் !

Posted by - November 6, 2018

தீபாவளி பண்டிகை நாடெங்கிலும் உள்ள இந்து மக்கள் உற்சாகம் பொங்க கொண்டாடி வருகின்றனர். கடல் கடந்து வாழும் அதிரையின் மைந்தர்கள் அகம் மகிழ தித்திக்கும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். முன்னதாக தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்களை அதிரை எக்ஸ்பிரஸ் இணைய ஊடகத்தின் வாயிலாக எந்த வித நிபந்தனையும் இன்றி வெளிப்படுத்த உள்ளதாக வெளியிட்டு இருந்தோம். அதனடிப்படையில், இளம் சிறார்கள் முதல், கடல்கடந்த உள்ளங்களின் தீபாவளி சிதறல் புகைப்படங்களை அனுப்பியுள்ளனர். அதன் சில புகைப்படங்களை இங்கே பதிகின்றோம்.

Read More

கர்நாடக 5 தொகுதி இடைத்தேர்தலில் பிஜேபி படுதோல்வி !

Posted by - November 6, 2018

கர்நாடகாவில் நடைபெற்ற 3 நாடாளுமன்ற மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் 4 தொகுதிகளில் காங்கிரஸ் – மஜத கூட்டணி அதிரடியாக வெற்றிபெற்றுள்ளது. கர்நாடக அரசியலில் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இடைத்தேர்தலுக்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த நவம்பர் 3ம் தேதி அங்கு 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. ஷிவமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய மூன்று நாடாளுமன்ற தொகுதிகளிலும், ராமநகர், ஜம்கண்டி ஆகிய சட்டசபை தொகுதிகளும் தேர்தல் நடந்தது.

Read More

தமிழ் ராக்கர்ஸ்ஸில் தடையை மீறி வெளியாகிய சர்க்கார்..!!

Posted by - November 6, 2018

நடிகர் விஜயின் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகியுள்ள படம் “சர்கார்” இது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியிடப்பட்டது. இதற்கிடையில் நேற்று ‘சர்கார்’ படத்தின் எச்.டி. பிரிண்ட்டை வெளியிடப்போவதாகத் “தமிழ் ராக்கர்ஸ்” இணையதளம் பயங்கரமாக அறிவித்தது. இந்த அறிவிப்பின் பிறகு தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடி இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களில் படத்தை வெளியிட கூடாது என்று நீதிமன்றத் தடையையும் வாங்கியது. இவற்றை எல்லாம் தவிடுபொடியாக்கும் விதமாக ‘சர்கார்’ படத்தை வெளியிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ். அவர்கள் சொன்னதுபோல் ஹெச்.டி. பிரிண்ட்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)