மர்ம காய்ச்சல் பரவாமல் தடுக்க அதிரை பேரூராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை..!!

Posted by - November 1, 2018

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சியில் மர்ம காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது காலை 6 மணியிலிருந்து வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அதிரையில் கனமழையால் டெங்குகாய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் முன்னெச்சரிக்கைக்கு தேவையான தளவாட பொருட்கள், கிருமிநாசினிகள், புகைமருந்து தெளிப்பான்கள், மற்றும் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுப்பதற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் பயன்பாட்டில் உள்ளது.

Read More

டெங்கு குறித்து மல்லிப்பட்டிணம் SSM மருத்துவமனையின் மருத்துவர் பிரபாகரன் பேட்டி…!

Posted by - November 1, 2018

பரவிவரும் டெங்கு குறித்து மல்லிப்பட்டிணம் SSM மருத்துவமனையின் மருத்துவர் பிரபாகரன் அதிரை எக்ஸ்பிரஸ் மூலமாக பொதுமக்களுக்கு விளக்கமளிக்கிறார்.    

Read More

இமாம் ஷாஃபி பள்ளியில் நடக்கவிருந்த விளையாட்டு தினம் நிகழ்ச்சி ஒத்திவைப்பு..!!

Posted by - November 1, 2018

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடக்கவிருந்த விளையாட்டு தினமானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று மாலை 2.30 மணியளவில் விளையாட்டு தினம் (SPORTS DAY) நிகழ்ச்சி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. தற்பொழுது மழையின் காரணத்தால் இன்று நடக்கவிருந்த விளையாட்டு தினம் நிகழ்ச்சியானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறிப்பு : அடுத்து இந்நிகழ்ச்சி நடத்தப்படும் தேதியானது பின்னர் தெறிவிக்கப்படும்.

Read More

ஊரில் நடத்தும் ஆய்வை அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் இருந்தே தொடங்கி இருக்க வேண்டும்..!

Posted by - November 1, 2018

  தமிழகத்தில் பரவலாக பரவி வரும் டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சைக்கான வசதிகளை சுகாதார துறை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அதிராம்பட்டினம் சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் வீடு வீடாக விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு குழுக்களை அனுப்பி வருகிறது,மாவட்ட நிர்வாகம். அவர்களின் ஆய்வை பேரூராட்சி அலுவலகத்தில் இருந்தே தொடங்கி இருக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள். பேரூராட்சியின் பின்புறம் மலைபோல் தேங்கி இருக்கும் பேரூராட்சியின் கழிவு

Read More

மல்லிப்பட்டிணத்தில் குழந்தை விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

Posted by - November 1, 2018

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் சமூக பாதுகாப்பு துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் குழந்தை திருமணம் தடுத்தல் குறித்து பிரச்சாரம் நடைபெற்றது.இதில் ராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்க வட்டார ஒருங்கிணைப்பாளர் A.நூருல் அமீன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு 2012ல் இருந்து தஞ்சையில் செயல்பட்டு வருகிறது.மாவட்ட முழுவதும் குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல், குழந்தை திருமண தடுத்தல்,கொத்தடிமையாக இருக்கும் குழந்தைகள் மீட்டல்,குழந்தை பாலியல் அத்துமீறல் குறித்தும் கலைநிகழ்ச்சியுடன் விழிப்புணர்வு

Read More

அதிரையில் அழகிய மழை !

Posted by - November 1, 2018

தீபாவளி என்றாலே மழையும் மறுபுறம் வெடியும்தான் நினைவுக்கு வரும். கடந்த சில நாட்களாகவே தமிழக வானிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் நேற்று மட்டும் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ள நிலையில் இன்று அதிராம்பட்டினத்தில் காலை முதல் மேக மூட்டத்துடன் கூடிய மழை பெய்து வருகிறது.

Read More

தக்வா பள்ளியின் நிர்வாகத்தில் அரசியல் சாயம் கலக்க கூடாது!

Posted by - November 1, 2018

அதிரை புதியவன் தமிழகத்தில், 1980 வரை ஜமாத் அமைப்புக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதும் செயல்பட்டதும் ஏறக்குறைய அரசியல் கட்சிகளை போலத்தான். இரு பெரும் கழகம் சார்ந்த ‘கரை கைலிகள் ‘ அணிந்த முஸ்லிம் உடன் பிறப்புக்களும் – இஸ்லாமிய இரத்தத்தின் இரத்தங்களும்தான், பள்ளிவாசல் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தினர். அரசியலில் நடப்பது போலவே ஜமாத் தலைமைக்கு போட்டி போடுவது, அதற்காக, ஆட்களை பிடித்தல், கடத்தல் மற்றும் அடிதடிகள் உள்ளிட்டவைகள் நடப்பதாக நாம் அரிந்திருக்கின்றோம். இந்த இழி நிலைமை மாறுவதற்கு, தமிழக முஸ்லிம்கள்

Read More

பேராவூரணியில் குளத்தை சொந்த முயற்சியில் தூர் வாரிய இளைஞர்கள்!!

Posted by - November 1, 2018

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் ஆவணம் பெரியநாயகிபுரம் சின்னக்குளத்தை தங்களது சொந்த முயற்சியில் தூர் வாரும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆவணம் பெரியநாயகிபுரம் சின்னக்குளம் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தூர் வாரப்படாமல், பாசி படர்ந்தும், சேறும், சகதியுமாக இருந்தது. இதனால் கடும் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதனால் இப்பகுதி சுகாதாரம் பாதிக்கப்பட்டு, கொசுக்கடி பிரச்சினையும் தலைதூக்கத் தொடங்கியது. இக்குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்தி தண்ணீர் நிரப்பித் தருமாறு இப்பகுதி இளைஞர்கள் ஊராட்சி ஒன்றிய ஆணையர்

Read More

பட்டுக்கோட்டை புதிய டிஎஸ்பியாக எஸ்.கணேசமூர்த்தி பொறுப்பேற்பு !

Posted by - November 1, 2018

பட்டுக்கோட்டை புதிய டிஎஸ்பி-யாக எஸ். கணேசமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கும்பகோணத்தில் டிஎஸ்பி-யாக பணியாற்றி வந்தார். தற்போது பணி மாறுதலாகி பட்டுக்கோட்டை வந்துள்ளார். புதிய டிஎஸ்பி-யாக நியமிக்கப்பட்ட இவர், புதன்கிழமை பொறுப்பெற்றுக் கொண்டார். ஏற்கனவே பட்டுக்கோட்டை டிஎஸ்பி-யாக இருந்து வந்த செங்கமலக்கண்ணன் கும்பகோணத்திற்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)