பட்டுக்கோட்டையில் அடையாளம் தெரியாதவர் விபத்தில் சிக்கி மீட்பு…தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளலாம்..!

Posted by - October 22, 2018

பட்டுக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத ஒருவர் விபத்தில் இருந்து மீட்கப்பட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் காயமடைந்த அவர் தற்போது முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அங்கு இருக்கிறார். அவருடைய விவரங்களை கேட்டதற்கு அவர் சொல்ல மறுத்துள்ளார். அவருடைய புகைப்படமும் மேலே இணைக்கப்பட்டுள்ளது. எனவே அவரைப் பற்றி தெரிந்தவர்களோ அல்லது அல்லது அவருடைய உறவினர்களோ பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Read More

இரட்டை வேடம் போடும் அதிரை பேரூராட்சி நிர்வாகம் !

Posted by - October 22, 2018

தமிழக அரசின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுகளுக்கே சென்று குப்பைகள் வாங்கப்பட வேண்டும் என்பது தான் சட்டம். ஆனால் அதிரை பேரூராட்சி நிர்வாகம் இத்திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது. அதிரையின் பெரும்பாலான பகுதிகளில் இத்திட்டம் கைகழுவப்பட்டுவிட்டது. அவ்வாறு சில பகுதிகளில் இத்திட்டம் தற்போது நடைமுறையில் இருந்தாலும் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை. சரி விஷயத்திற்கு வருவோம்… அதிரை பேரூராட்சிக்குட்பட்ட 13வது வார்டு வாய்க்கால் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கென்று தனியாக இடமில்லை.

Read More

மக்களின் உயிரை காவு வாங்க காத்திருக்கும் மின்கம்பிகள்…நடவடிக்கை எடுக்குமா அதிரை மின்வாரியம் ?

Posted by - October 22, 2018

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மழவேனிற்காடு தெற்குத் தெரு கிராமத்தில் மின் கம்பங்கள் இல்லாமல் மின் கம்பிகள் தொங்குகின்றன. அப்பகுதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் அதிகம் சென்று வரக்கூடிய பகுதியாகும். இதுபோல் மின்கம்பம் இன்றி தொங்கும் மின்கம்பிகளால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இம்மின்கம்பிகளால் ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் உயிரிழக்கின்றன. அப்பகுதி மக்கள் கூறும்போது, நாங்கள் பலமுறை சென்று அதிகாரிகளிடம் புகார் அளித்துவிட்டோம். ஆனால் இன்று வரை எவ்வித நடவடிக்கையும்

Read More

உயிர் காக்கும் சேவையில் சிறப்பாக செயல்பட்ட இளைஞர் ஹவாஜாவுக்கு குவியும் பாராட்டுக்கள் !

Posted by - October 22, 2018

மல்லிப்பட்டினம் கட்டயபாலத்தில் இயங்கி வரும் இறால் பிளான்டில் வேலை செய்யும் கூலி தொழிலாளி ஒருவர் கடந்த 20ம் தேதி மாலை பணியை செய்து கொண்டிருக்கும் போது அவர் அணிந்திருந்த கைலி மோட்டாரில் சிக்கி அவருடைய காலும் சிக்கி விட்டது. பின்பு அவர் கால் முறிந்த நிலையில் மீட்டெடுக்கப்பட்டார். உடனே அவர் மல்லிப்பட்டினம் சமுதாய நல மன்ற ஆம்புலன்ஸில் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்தில் சிக்கியவர் 3 மணி நேரங்களில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு

Read More

அதிரையில் ஆதரவற்ற முதியவரின் உடலை அடக்கம் செய்த CBD அமைப்பினர் !

Posted by - October 22, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நேற்றைய தினம் உடல் நிலை பாதிக்கபட்ட நிலையில் ஒரு பெரியவர் பேருந்து நிலையத்தில் இருந்தார். இதைக்கண்ட பொதுமக்கள் அதிராம்பட்டிணம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே வந்த அவர்கள் அப்பெரியவரை அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் இன்று காலை அவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இதனையடுத்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் இருந்து காவலர் திரு. பாலா அவர்கள் CBD உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே நேரில் சென்று CBD நிர்வாகிகள்

Read More

தொடரும் மின் தடைக்கிடையில், நாளை மறுநாள் அதிரையில் மீண்டும் முழு நேர மின் தடை!!

Posted by - October 22, 2018

அதிரையில் நாளுக்கு நாள் மின் தடை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த இரு மாதங்களில் 50 க்கும் மேற்பட்ட காரணமில்லா மின் தடை ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் கேட்கும்போது முறையான பதிலேதும் கிடைப்பதில்லை எனவும் புகார் எழுந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்படுகிறது. மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் என்று கூறி முழு நேர மின் தடை செய்யும் மின் வாரியம்,

Read More

ஸ்தம்பித்தது திருச்சி மத்திய ஆட்சியாளர்கள் அதிர்ச்சி !

Posted by - October 22, 2018

அரசியல் அதிகாரம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பரவலாக்கப்பட வேண்டும், ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மற்றும் முஸ்லிம்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்ற அடிப்படையில், அரசியலாய் அணி திரள்வோம்! அதிகாரத்தை வென்றெடுப்போம்! என்ற முழக்கத்தோடு ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு திருச்சி ஜி கார்னரில் நேற்று (அக்.21) நடைபெற்றது. மாநாட்டின் முதல் நிகழ்வாக காந்தியடிகள் அரங்கில் ‘நெருக்கடிக்குள்ளாகும் மதச்சார்பின்மையும், அரசியல் எழுச்சிக்கான தேவையும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோல் முற்போக்கு பத்திரிக்கையாளர் கெளரிலங்கேஷ் அரங்கத்தில் ‘ஒடுக்கப்பட்ட

Read More

கோட்டையை வேட்டையாடி வெற்றிக் கோப்பையை வென்ற அதிரை WFC!!

Posted by - October 22, 2018

கோட்டைப்பட்டினம் அணியினர் சார்பாக மின்னொளி எழுவர் கால்பந்து தொடர் போட்டி கோட்டைப்பட்டினத்தில் நடைபெற்று வந்தது. இந்த மின்னொளி கால்பந்து தொடர் போட்டிக்கு அதிரை AFFA மற்றும் அதிரை WFC ஆகிய அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. இத் தொடரில் அதிரை WFC அணி அட்டகாசமான ஆட்ட நுணுக்கங்களை கொண்டு தனது லீக் போட்டி மூன்றிலும் வெற்றி கண்டதோடு மட்டுமல்லாமல் தொடரையும் வென்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. முன்னதாக முதல் லீக் போட்டியில் திருச்சியை எதிர்கொண்ட அதிரை WFC

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)